நெல்லையில் அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக இந்து முன்னனியினர் 19 பேர் கைது
நெல்லை: நெல்லை டவுனில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அகற்றப்பட்டது. இது தொடர்பாக இந்து முன்னணியினர் 19 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நெல்லை டவுன் பட்டாபத்து குமரன் தெருவில் ஓவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து, பின்னர் அதனை ஆற்றில் கரைப்பது வழக்கம்.

கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது இங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை ஆற்றில் கரைப்பதற்காக போலீசார் அனுமதித்த பாதை வழியாக செல்லாமல் பிரச்சனைக்குரிய பகுதி வழியாக கொண்டு செல்ல முயன்றனர். இதை போலீசார் தடுத்ததால் தளளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக இந்து முன்னனியை சேர்நத சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் எதிரோலியாக போலீசார் இந்தாணடு அங்கு விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுததனர். ஆனால் அனுமதியின்றி பட்டாபத்து குமரன் தெருவில் இந்து முன்னனியினர் விநாயகர் சிலையை வைத்தனர். இதையடுத்து உதவி கமிஷனர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர் முருகன் மறறும் போலீசார் அங்கு வந்து சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர்.
இது தொடர்பாக இந்து முன்னனி மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் குற்றாலநாதன், மாவட்ட செயலாளர் வினோத், வக்கீல் வீரராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் முனனிலையில் கைப்பற்றப்பட்ட விநாயகர் சிலை ஆற்றில் கரைக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் விடுவிக்கப்பட்டனர்.
ஆனபோதும், தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications