8 ரயில் நிலையங்களை இணைத்து கேபிள் சேவை துவக்கம்

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் இருந்து 8 ரயில் நிலையங்களை இணைத்து கேபிள் சேவை துவங்கபபட்டுள்ளது. இந்த சேவையை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் துவங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் தென்காசி முதல் விருதுநகர் வரை 123 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில்வே பகுதியில் ரூபாய் 2 கோடியே 46 லட்சம் செலவில் ஆப்டிகல் கேபிள் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது.

Nellai railway stations will connect with cable service

இதனை மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் சுனில்குமார் கார்க், தென்னக ரயில்வே தலைமை தொலை தொடர்பு மற்றும் சிக்னல் பொறியாளர் சிவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதுகுறித்து மதுரை கோட்ட மேலாளர் சுனில் குமார் கார்க், "ரயில்வேயில் சிக்னல், ரயில்கள் வருகை, முன் பதிவு போன்ற சேவைகள் பிஎஸ்என்எல் மூலம் பெற்று வந்தோம். தற்போது ரயில்வே துறை சொந்தமாக ஆப்டிக்கல் கேபிள் பதித்துள்ளது.

தென்காசி முதல் விருதுநகர் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு 8 நிலையங்கலை இணைக்கும் விதமாக 2 கோடியோ 46 லட்ச ரூபாய் செலவில் இந்த கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இதில மொத்தம் 23 இழைகள் உள்ளன. ஒரு இழையை ரயில்வே துறை பயன்படுத்துகிறது.

மீதமுள்ள இழைகளை தனியார் உபயோகத்திற்கு விடுவதற்கு பரீசிலனை செய்யப்பட்டு வருகிறது. இநத ஆண்டு செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணிகளை முடிக்கலாம் என்று கருதுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+