தொடர் மழையால் கந்தலான நெல்லை- தென்காசி சாலை; மக்கள் அவதி
நெல்லை: நெல்லை தென்காசி சாலையில் மழையால் எங்கு பார்த்தாலும் குண்டும், குழிகளுமாக கந்தலாக காட்சி அளித்து வருவதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி முக்கிய நகரமாக செயல்படுகிறது. இங்கு மாவட்ட தலைமை மருத்துவமனை சுகாதார இணை இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலங்கள் இயங்கி வருகின்றன. தென்காசியை அடுத்துள்ள குற்றாலம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக கருதப்படுகிறது.

இங்கு பருவமழை காலங்களில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும், மேலும் ஐந்தருவியில ஈக்கோ பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண நாட்களிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். இது மட்டுமல்லாது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கேரள மாநிலம் புனலூர், கொல்லம் உள்ளி்ட்ட இடங்களுக்கு ஏராளமான லாரிகளும் செல்லும்.
இவை தென்காசியை கடந்து தான் செல்கின்றன. செங்கோட்டையில் இயங்கி வரும் மர அறுவை ஆலைகள் பல வெளிநாடுகளில் இருந்து மரங்களை தூத்துக்குடியில் இருந்து தென்காசி வழியாகத்தான் இங்கு கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் முடிந்த பிறகும் விட்டு விட்டு பெய்து வருவதால் நெல்லையிலிருந்து தென்காசி செல்லும் சாலை பல இடங்களில் பெயர்ந்து விட்டன. இந்த பள்ளத்தால் வாகன ஓட்டிகளால் வாகனத்தை சரியாக ஓட்ட முடியவில்லை. பெரிய வகை குழிகள் கிடப்பதால் இந்த பள்ளத்தில் சிறிய வகை கார்கள் விழுந்து சேதம் அடைந்து வருகின்றன.
பல பஸ்கள் இந்த பள்ளதால் பழுதாகி சாலையில் நிற்கின்றன. அரசு நிர்வாகம் இதை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோபத்தில் இருந்து வருகின்றனர். அடுத்து போராட்டத்தில் குதிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications