ஜாதி கொடிகளை ஏற்ற எஸ்பி அதிரடி தடை... நெல்லையில்!
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஜாதி கொடிகளை ஏற்ற நெல்லை மாவட்ட எஸ்பி திடீர் தடை விதித்துள்ளார். இதனால் ஜாதி கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக ஜாதி மோதல்கள் அதிகரித்து வருகின்றன. விழாக்களில் சமுதாய தலைவர்கள் பொறிக்கப்பட்ட ஆடைகள் அணிவது, உருவ போர்டு வைப்பது, கொடி கம்பம் அமைப்பது, அரசு மின் கம்பம் சுவர் பகுதிகளில் சமுதாய வண்ணங்களை வரைவது போன்றவை அதிகரித்து வருகிறது. இதனால் அடிக்கடி மோதல் உருவாகி வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களில் சமுதாய கொடிகளை அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் முன் அனுமதி பெற்று குறிப்பிட்ட தினங்களில் வைத்து பின்னர் அகற்ற மதுரை உயர்நீதிமன்றக் கிளை சமீபத்தில் அறிவித்தது. இதையடுதது நெல்லை மாவட்டம் முழுவதும் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ளாட்சி அனுமதி பெற்றும், பெறப்பாடமலும் அகற்றப்படாமல் இருக்கும் கொடி கம்பங்கள் மற்றும் போர்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நெல்லை எஸ்பி கூறியிருப்பதாவது...
நெல்லை மாவட்டத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழவும், சமூக ஓற்றுமை தழைத்திடவும் பிரச்சனைக்குரிய தட்டி போர்டுகள், சுவர்களில் எழுத்தப்பட்டுள்ள சமுதாய சின்னங்களை அந்தந்த பகுதி மக்களே தாமாக முன்வந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி நகரம் மற்றும் கிராமங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டுகள் மற்றும் கொடி கம்பங்களை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் அகற்ற பொது மக்கள் ஓத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications