முன்னேறும் காற்றாலை மின்சாரம்... நெல்லை மக்கள் மகிழ்ச்சி
நெல்லை: காற்றாலை மின்சாரம் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த நிலையில் தற்போது அவை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. காற்று சீசன் காலத்தில் நாள்தோறும் சராசரியாக இரண்டாயிரத்து ஐநூறு மெகா வாட்டுக்கு குறையாமல் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும்.
இந்த நிலையில் கடந்த இரணடு வாரங்களுக்கும் மேலாக காற்றாலை மின் உற்பத்தி கடுமையாக சரிந்தது. தென்மேற்கு பருவமழை சீசன் ஓய்ந்ததால் காற்று வீச்சும் குறைந்தது. கடந்த சில நாட்களாக பூஜ்யம் என்ற நிலைக்கு காற்றாலை மின்சாரம் உற்பத்தி சரிந்தது.
இதனால் பல பகுதிகளில் தினந்தோறும் 2 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு தலை தூக்கியது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையும், இரவு 6 மணி முதல் 7 மணி வரையும் திடீரென மின்சாரம் தடை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு காற்றாலை மின் உற்பத்தி திடீரென அதிகரித்தது. அப்போது 1798 மெகா வாட் மின்சாரம் கிடைத்தது. இது அதிகாலை திடீரென 439 மெகா வாட்டாக குறைந்தது. பின் மீண்டும் 806 மெகா வாட்டாக திடீரென அதிகரித்தது. சராசரியாக 628 மெகா வாட் மின்சாரம் கிடைத்து வருகிறது. இதர மின்சாரம் வெளி இடங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு நிலைமை சமாளிக்கப்பட்டு வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications