வெங்கட்டின் “விஷூவல் டிரீட்” கல்யாணம் - வீடியோ இன்வைட் கொடுத்த வித்தியாச நெல்லைக்காரர்!
நெல்லை: கல்யாணம்னா நாமெல்லாம் என்ன செய்வோம்? பத்திக்கை அடிச்சு உற்றார், உறவினர், தெரிஞ்சவர், தெரியாதவர் எல்லோருக்கும் குடுப்போம்.
ஆனா, இங்க ஒருத்தர் தன்னோட கல்யாணப் பத்திரிக்கையை முழுக்க, முழுக்க விஷூவல் டிரீட்டா குடுத்து அசத்தியிருக்கார்.
கிட்டதட்ட பாட்டாவே பாடி தன்னையும், தன்னுடைய வருங்கால மனைவியையும் அறிமுகப்படுத்தியிருக்கார் திருநெல்வேலியைச் சேர்ந்த வெங்கட்ராமன்.

புதுமாப்பிளையும், பொண்ணும்:
திருநெல்வேலி ஹலோ எப்.எம் ஆர்ஜேதான் இந்த வித்தியாசமான புதுமாப்பிள்ளை வெங்கட்ராமன். கஸ்தூரிதான் இவருடைய ஹீரோயின். அதாங்க கல்யாணப் பொண்ணு.
எல்லாமே வித்தியாசம்தான்:
எல்லாத்தையும் வித்தியாசமா யோசிக்கற வெங்கட்டுக்கு தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு ரூட் கிளியர் ஆனதும் கல்யாண பத்திரிக்கையையும் ஏன் வித்தியாசமா செய்யக் கூடாதுனு ஒரு யோசனை வந்துச்சு.
கல்யாணம் என்பது:
உடனே, தன்னோட நண்பரோடு சேர்ந்து, தானே பாட்டும் எழுதி அழகாக கல்யாணத்தோட சாராம்சத்தை பாட்டாவே பாடியிருக்கார்.
இனிமையானவரின் திருமணம்:
ஏற்கனவே, "நீங்களும் கதை எழுதலாம்" அப்படினு புக் எழுதியிருக்கிற இவர், பழகறதுக்கும் அருமையான குணம் கொண்டவர்ன்னு சொல்றாங்க அவரோட நட்பு வட்டத்தில்.
இது லைவ் கல்யாணம்:
அதுமட்டுமில்ல கல்யாணத்தையும் ஆன்லைன்ல லைவ் குடுக்கப் போற வெங்கட், வரவங்களுக்கெல்லாம் மரம், காய்கறி விதைகளைக் கொடுத்து பசுமை எண்ணத்தையும் ஏற்படுத்தப் போறாராம்.
டிரெண்டோ டிரெண்ட்:
யூடியூப்லையும், பேஸ்புக்லையும் சக்கை போடு போடும் இந்த புது கல்யாண இன்விட்டேஷன் கூடிய சீக்கிரமே யூத்கள் கிட்ட டிரெண்டாக பிராப்திரஸ்து! எங்கள் சார்பாகவும் இனிய திருமண வாழ்த்துகள் வெங்கட்-கஸ்தூரி!
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications