மச்சான் என்கிட்ட டுவீலர் லைசன்ஸ்தான் இருக்கு...டிராபிக் போலீஸ் யாராவது ஸ்டிரைக் பண்றாங்களானு பாருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் குறித்து ஜோக் என எஸ்.வி. சேகர் டுவிட்டர் பதிவிற்கு நெட்டிசன்களிடம் இருந்து பல்பு வாங்கினார்.

ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்கள் பாதிப்பை தடுப்பதற்காக தற்காலிக ஓட்டுநர், பேருந்தை கொண்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் இதுகுறித்து எஸ்வி சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் காமெடி என்று சொல்லிக் கொண்டு ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் படித்தது 😂 மச்சான் கோயம்பேடுல இருக்கேன்.. ஊருக்கு போக வண்டி இல்லடா என்ன பண்றது....

கைல லைசென்ஸ் வெச்சுருந்தா... எனக்கு வண்டி ஓட்ட தெரியும் ன்னு சொல்லு... உன்கிட்ட ஒரு பேருந்த கொடுப்பானுங்க கொண்டு போய் திருநெல்வேலில நிறுத்திட்டு வீட்டுக்கு போ... என்று குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்துக்கு நெட்டிசன்களின் பதிலடிகளை பார்ப்போம்.

சிரிப்பே வரல...

ஜோக் ஆ இது...சிாிப்பே வரல வேற ஜோக் சொல்லுங்க.


1980-இல வர வேண்டியது
அப்டேட் ஆகுங்க சார்

டிராபிக் போலீஸ்

எங்கிட்ட டூவீலர் லைசென்சுதான் மச்சான் இருக்குது டிராபிக் போலிஸ் யாராவது ஸ்ட்ரைக் பண்றாங்களானு பார்த்து சொல்லு மச்சான்.

ஆஹாங்...

ஜோக் என்று சொல்லிக் கொண்டு கிண்டல் அடிக்கும் எஸ்வி சேகரை வடிவேல் கூறுவதுபோல் ஆஹாங்... என்கிறார் நெட்டிசன்.

நடத்துங்க...

உங்க நாடகத்து காமடி
நடத்துங்க நடத்துனரே.

சிரமப்படுறோம்

அட ஏயா நீ வேற அவன் அவன் சிரமப்படுறம் உனக்கு நக்கல்ஆ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netisans shared their views on S.Ve.Shekher's twitter comment about transport workers strike.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X