ரேஷன் கார்டை திருப்பி கொடுப்போம்.. கடையடைப்போம்.. சசிகலாவுக்கு எதிராக கொதிக்கும் சோஷியல் மீடியா
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சி, வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான பிரசாரம் போன்றவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது சோஷியல் மீடியா. முன்பெல்லாம் மக்களிடம் மீடியாக்கள் சென்று கருத்து கேட்டுதான் மக்களின் மனநிலை வெளி உலகிற்கு வரும். இப்போது அந்த வேலையைத்தான் சோஷியல் மீடியாக்கள் மூலம் மக்களே நேரடியாக செய்கிறார்கள்.
எனவே பெருவாரியான மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும், சோஷியல் மீடியாக்கள் கருத்தை யாரும் புறம் தள்ளிவிட முடியாத காலச்சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளனர் அக்கட்சி எம்.எல்.ஏக்கள். இதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்கிறார்கள். இது சோஷியல் மீடியாவில் உள்ளங்கை நெல்லிக் கனிபோல உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு செய்தியை கேள்விப்பட்டு துடித்தவர்களுக்கு ஈடாக, சசிகலா முதல்வராக பொறுப்பேற்க உள்ள தகவலை கேட்டு துடிக்கிறார்கள், நெட்டிசன்கள்.
இதோ சில டிவிட்டர் கமெண்டுகளை நீங்களே பாருங்கள்:
|
ஏன் ஒருவரிடமே
பொது செயலாளர் பதவியும் முதல்வர் பதவியும் ஒருத்தரிடமே இருந்தா குழப்பமில்லாம இருக்குமாம்....... யார் கால்ல விழுற குழப்பம்னு நினைக்கிறேன்
|
உரிமையாளராகவில்லையே
ஓபிஎஸ்க்கு ஒரு பஸ் வாங்கி கொடுத்தா ஓனர் ஆகாம ட்ரைவரா தான் போவேன்னு அடம்புடிக்கிறாரு
|
கஷ்டம்தான்
மியூசிக் சேர்ல வின் பண்ணி கடைசி உக்காரும் போது தள்ளிவிடபய சிறுவனின் மனநிலையில் தான் ஓபிஎஸ் இருப்பாரு
|
கடையடைப்பு
சசிகலா முதல்வராக பதவியேற்கும் நாளில் தமிழகம் முழுக்க கடையடைப்பு செய்து எதிர்ப்பை தெரிவிப்போம் என்கிறது இந்த டிவிட்.
|
அண்ணா நிலை
அண்ணா திமுக கொடியிலுள்ள பேரறிஞர் அண்ணா இப்போது இப்படி தலையில் கை வைப்பதை போலத்தான் இருப்பார் என்று ஆதங்கம் வெளிப்படுத்துகிறது இந்த டிவிட்.
|
ரேஷன் கார்டு
இனி சாகும்வரை அரசியல் பேசப்போவதில்லை! குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நாளை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பதிவுத்தபாலில்! போதும்!
|
பால்கனி போதும்
அதிமுகவுக்கு தேவை ஒரு பால்கனியும் ரெண்டு காலும் தான் போல, என்கிறது இந்த டிவிட். ஜெயலலிதாவை போலவே சசிகலாவும் பால்கனியில் நின்று கையாட்டுவதை இப்படி சொல்கிறார் போலும்.
|
என்ன ஒரு சக்தி
போகன் ஓலைச்சுவடி சசிகலா வுக்குத்தான் கிடைச்சிருக்கும்போல. நினைச்சா பொதுச்செயலாளர், நினைச்சா சிஎம் எல்லாம் ஆக முடியுது, என்று சொல்கிறது இந்த டிவிட்.
|
திமுகவுக்கு டிப்ஸ்
இனி திமுக இளநி உருவுற வேலைய ஆரம்பிச்சாங்கன்னா சீக்கிரம் கடை போட்டுடலாம். இவ்வாறு இந்த டிவிட் சொல்லும் இளநீர் என்பதன் குறியீடு என்னவென்பது உங்களுக்கே புரிந்திருக்குமே.
|
ஆஹான்
#Sasikala எனும் நான்.. என்று சசிகலா பதவி பிரமாண வேளையில் சொல்ல ஆரம்பிக்கும்போது தமிழர்கள் இப்படித்தான் வினுசக்கரவர்த்தி மாதிரி ஃபீல் செய்வார்கள் என்கிறது இந்த மீம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications