நடிகர்கள் கிரிக்கெட்டுக்கு பதில், நடிகைகள் கபடி ஆடியிருந்தால் கூட்டம் வந்திருக்கும்! கலகல மீம்ஸ்
சென்னை: நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டும் நோக்கில், சினிமா நடிகர்கள் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி பாக்க படு திராபையாக இருந்தது. சாலையோரத்தில் ஆடும் சிறுவர்களைவிட மோசமாக எதையோ ஆடிவிட்டு அதற்கு கிரிக்கெட் என்று பெயர் சூட்டியிருந்தனர் நடிகர்கள்.
ஓவருக்கு நடுவே வைடு பந்துகள் வீசப்படலாம்.. ஆனால் ஓவர்கள் எல்லாமே வைடாக இருந்தால் அதை பார்ப்பவர்களுக்கு எப்படி வயிறு எறியும் என்பதை நினைத்து பாருங்கள்.
இப்படி பாதிக்கப்பட்ட நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை கேலியாக கேலி சித்திரங்கள மூலம் வெளியிட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட சமூக வலைத்தள மீம்ஸ்கள் சிலவற்றை இதில் பாருங்கள்.

படுத்தே விட்டாரய்யா
ஒரு திரைப்படத்தில் ஆட தெரியாதவர்களை அழைத்து வந்து இரு கிராமங்கள் நடுவே கிரிக்கெட் போட்டியை நடத்துவார்கள் சத்தியராஜ் மற்றும் வடிவேலு குரூப். அதில் ஒருவர் பிட்சில் படுத்து தூங்கிவிடுவார். அதுபோலத்தான் ஜெயம் ரவி ஆட்டம் இருந்ததாக கூறுகிறது இந்த மீம்.

கேலி டீம்
நடிகர் சங்க தேர்தலின்போது, எல்லோரையும் வசீகரித்த நாசர், விஷால் டீம், தற்போது, கிரிக்கெட் போட்டி மூலமாக எல்லோரிடமும் கேலிக்குள்ளாகியுள்ள டீமாக மாறியுள்ளதாக கூறுகிறது இந்த மீம்.

வரவு எட்டணா, செலவு பத்தணா
ரசிகர்கள் வருகை சொற்பமாக இருந்ததால், கிரவுண்டு வாடகைக்கு கொடுத்த பணம், சாப்பாடு அளித்த பணம் என வருவாயை விட செலவு அதிகமாக இருந்ததாக கேலி செய்கிறது இந்த மீம். டிவி உரிமை, ஸ்பான்சர்கள் மூலம், ரூ.13 கோடியை நடிகர் சங்கம் சேர்த்துவிட்டது தனிக்கதை.

கபடி, கபடி
நடிகர்களை கிரிக்கெட் ஆட விட்டதற்கு பதிலாக, நடிகைகளை கபடி ஆட விட்டிருந்தால் கூட்டம் அள்ளியிருக்கும் என்று நாட்டு நடப்பை கூறுகிறார் இந்த நெட்டிசன்.

குடிசையானாலும் பரவாயில்லை
கட்டிடம் கட்டலாம் என்று ஆசைப்பட்டால், வந்திருக்கும் கூட்டத்தைவைத்து குடிசையாக இருந்தாலும் பரவாயில்லை என்று கூறும் நிலையில்தான் நாசர் குழு இருப்பதாக படிக்காதவன் பட காமெடியை வைத்து கேலி செய்கிறது இந்த மீம்.

பீர் அடிப்பார்
வெயிலுக்கு பீர் வேண்டுமானால் அடிப்பார், ரன் அடிக்க மாட்டார் என்று, ரன்னிங் கமெண்டரி அடித்த சந்தானத்தின் வார்த்தைகளை போட்டு வெளியாகியுள்ளது இந்த மீம்.

வீடு இல்லை
விசாலும் நாசரும், வீடு என்று நினைத்து, காட்டுக்கு காவல் இருப்பதை போல ஆகிவிட்டது என கிரவுண்டுக்கு கூட்டம் வராத தகவலை கேலி செய்கிறது இந்த மீம்.
-
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications