அரசின் சலுகை பெற அதிமுகவின் உறுப்பினர் அட்டை கட்டாயம்... செல்லூர் ராஜூ கருத்துக்கு பறக்கும் டுவீட்ஸ்
அரசின் சலுகைகளை பெற அதிமுகவின் உறுப்பினர் அட்டை கட்டாயம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் மக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை : அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளதற்கு டுவிட்டரில் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். அப்படியானால் அரசின் சலுகைகள் அதிமுகவினருக்கு மட்டும் தான் கிடைக்கிறதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையில் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக உறுப்பினர் அட்டை உயிர் போன்றது. அரசின் நலத்திட்டங்கள், உதவிகள் உள்ளிட்டவற்றை பெற வேண்டுமென்றால் அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை கட்டாயம்.
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால் தான் அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்பதை பட்டவர்த்தனமாக தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அமைச்சரின் இந்த கருத்துக்கு பலரும் கடுமையான கண்டனங்களை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
|
அதிமுகவினரிடம் மட்டும் வரி வசூலிச்சுங்கோங்க
அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான், இனி அரசு நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அப்படின்னா எல்லா வரிகளையும் அதிமுக உறுப்பினர் அட்டை வைத்து இருப்பவர்களிடம் மட்டும் வசூலித்து கொள்ளுங்கள் அமைச்சரே.. என்று கூறியுள்ளார் இவர்.
|
தப்ப பப்ளிக்கா சொல்றீங்க
உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அதிமுகவினர் அரசின் சலுகைகளை பெற முடியும்- அமைச்சர் செல்லூர் ராஜூ # தப்புக்கு மேல தப்பு பண்ணீட்டே இருக்கீங்க,அரசின் சலுகைகளை கட்சிக்காரங்களுக்கு ஒதுக்குவதே சட்டப்படி தப்பு,அதை கூச்சமே படாம பப்ளிக்கா வேற சொல்றீங்க என்று பதிவிட்டுள்ளார் இந்த வலைபதிவர்.
|
மக்கள் வரிப்பத்தில் நலத்திட்ட உதவிகள்
அரசின் உதவிகளைப் பெற அதிமுக உறுப்பினர் அட்டை கட்டயாம் என்கிறார் அமைச்சர். நீங்கள் நலத்திட்ட உதவிகள் செய்வது மக்கள் வரி பணத்தில்,கட்சி நிதி பணத்தில் இல்லை அமைச்சரே!! என்று கொந்தளித்துள்ளார் இவர்.
|
எல்லாரும் மெம்பராயிடுவாங்க
என்னது அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் தான் அரசு உதவி கிடைக்குமா. பேசமால் ஆதாரோடு உறுப்பினர் அட்டையை இணைச்சி விட்டுருங்க எல்லோரும் உங்க கட்சி மெம்பராகி விடுவாங்க என்று ஒரு ஐடியாவை கூறியுள்ளார் இவர்.
|
அதிமுகவுக்கு மட்டும்தான்னு சொல்லுங்க
அமைச்சரின் சர்ச்சை பேச்சு அரசின் நலத்திட்ட உதவி அதிமுகவினரை மட்டுமே சென்றடைகிறதா என்ற புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. அரசின் நலத்திட்ட அப்போ எல்லா உதவியும் உங்க கூட்டத்துக்கு மட்டும் தான் கிடைக்குதுனு சொல்லுங்க ஆபீஸர்😏
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications