நேற்று பரட்டை.. இன்று பேட்டை.. நாளை கோட்டை... தெறிக்கும் டிவிட்ஸ்!!! #பேட்ட
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165 படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கலக்கி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165 படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் டிவிட்டரில் கலக்கி வருகின்றனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு பெயர் பேட்ட என்று வைத்துள்ளனர். மேலும் படத்தலைப்பு தொடர்பான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ரஜினியுடன் த்ரிஷா , விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் பெயர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
|
பேட்டைக்கு ஆகுறேன்
நாட்டுக்கு ஆகலன்னா என்ன?
"பேட்டை"க்கு ராஜா ஆகப்போறேன்.
|
மரண வெயிட்டிங்
ப்பா... #Petta
தலைவர் லுக் வெறித்தனம்
மரண வெயிட்டிங்
|
வரார் வரார்
பேட்டை ராஜா வரார் வரார் வரார்
|
கொக்கு இட்ட முட்ட கட்ட
கொக்கு நெட்ட கொக்கு நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட
|
அதுவும் கெத்தாகத் தான் இருக்கு
"பேட்டை" என்றே வைத்திருக்கலாமே?!
அதுவும் கெத்தாகத் தான் இருக்கு.
|
பேட்டை மன்னன்
கோட்டையை ஆளப்போகும் பேட்டை மன்னன்
|
அள்ளுது கண்ணா
சும்மா அள்ளுது கண்ணா
|
பாட்ஷால பார்த்த அதே லுக்
பேட்டைகுள்ள பொல்லாதவன் ...
செம Ragged look பாட்ஷால பார்த்த அதே ragged look.. வெறித்தனம்
|
நாளை கோட்டை
#Petta நேற்று பரட்டை,இன்று பேட்டை
நாளை கோட்டை.. மக்கள் தலைவர்
|
தெறிக்க விடுதா?
மாஸ் பார்த்திருப்பீங்க. வேற
லெவல் பார்த்திருப்பீங்க..
வேற லெவல் மாஸ் பாத்திருக்கிங்களா..
தெறிக்க விடுதா?












Click it and Unblock the Notifications