For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரஜினி முதல்ல நோட்டாவை முந்தணுமே... டிவிட்டராட்டிகளின் கலகல!

ரஜினி அரசியலுக்கு வந்தால் முதலில் நோட்டாவை முந்துவாரா என்று கேட்கின்றனர் ட்விட்டர்வாசிகள். அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கும் வரை இந்த கிண்டல் ஓயாது போல.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    31ம் தேதி சஸ்பென்ஸ் உடைக்கப்போகும் ரஜினி!- வீடியோ

    சென்னை: ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 31ஆம் தேதி அறிவிக்கப் போவதாக கூறியுள்ளார். அதற்குள் நெட்டிசன்ஸ் கமெண்ட் அனல் பறக்கிறது.

    சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று கூறியும் விடாமல் அடிக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

    ரஜினி அரசியலுக்கு வருவது குறித்தும், அதற்கு அரசியல் தலைவர்கள் கருத்து கூறுவதை வைத்தும் மீம்ஸ் வறுக்கின்றனர் நெட்டிசன்ஸ்.

    எதிர்ப்பார்ப்பு

    கமல் அரசியல் பேசுனா மீடியால ரஜினியா கமலானு விவாதம் நடக்கும், ரஜினி அரசியல் பேசுனா ரஜினிய பத்தி மட்டும் விவாதம் நடக்கும், அதான் ரஜினி கெத்து,ஏனா எதிர்ப்பார்ப்பு இப்பவும் எப்பவும் ரஜினிய நோக்கி தான் இருக்கு என்று கூறுகிறார் ஒரு வலைஞர்.

    நோட்டாவை முந்தணுமே

    அரசியல் எனக்கு புதிதல்ல யுத்தத்துக்கு சென்றால் வெற்றி பெறனும் அதற்கு வீரம் மட்டும் போதாது வியூகமும் தேவை-ரஜினி ஆமா நோட்டாவை முதல்ல முந்தனும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

    எந்த போர்

    போர் என்று சொன்னது அரசியலை அல்ல- ரஜினி அப்போ.., ரஜினி சொன்ன போர், எந்தப் போர்??? மிக சரியான விடையளிப்பவர்களுக்கு ஆர். நகரில் எம்எல்ஏ சீட் கன்பார்ம்.

    நீங்க சொல்ல மாட்டீங்க

    எனது அரசியல் பிரவேசம் பற்றி மக்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ ஊடகங்களுக்கு இருக்கிறது என்ற ரஜினியின் கருத்துக்கு, கடைசிவரை உங்களுக்கு ஆர்வம் இருக்கா இல்லையான்னு மட்டும் சொல்லமாட்டிங்க போல...! என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.

    என்னா தலைவரே

    போர் வரும்போது பார்க்கலாம் என்றேன்,போர் என்றால் அரசியல் தானா? - ரஜினி... என்ன தலைவரே தொண்டை லைட்டா கவ்வுற மாதிரி தெரியுது..

    English summary
    Netizens are over working on Rajini's recent Political speech during his meeting with fans in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X