சண்முகம் செட்டி, சிதம்பரம் செட்டி என டிவி டிபேட்டில் பேச்சு- பாஜக ஆதரவு வெங்கடேஷ்-க்கு கண்டனம்!
டிவி விவாதத்தில் ஜாதியை குறிபிட்டு எள்ளலாக பேசிய பாஜக ஆதரவாளர் எம்.ஆர். வெங்கடேஷ்-க்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னை: டிவி விவாத நிகழ்ச்சியில் 'சண்முகம் செட்டி முதல் சிதம்பரம் செட்டி வரையிலான' பட்ஜெட்டை பார்த்திருக்கிறோம் என பாஜக ஆதரவாளர் எம்.ஆர். வெங்கடேஷ் பேசியதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பட்ஜெட்டை முன்வைத்து நாடாளுமன்றம் அருகே இருந்து புதிய தலைமுறை நேற்று சிறப்பு நேர்பட பேசு விவாத நிகழ்ச்சியை நடத்தியது. இதில் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சியின் டிகே ரங்கராஜன், பாஜக ஆதரவாளரான கொள்கை ஆய்வாளர் எம்.ஆர். வெங்கடேஷ், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விவாதத்தின் போது, சண்முகம் செட்டி முதல் சிதம்பரம் செட்டி வரையிலான அனைத்து பட்ஜெட்டிலும் கருப்பு பணம் பற்றி இடம்பெற்றிருக்கிறது என ஜாதியை சுட்டிக்காட்டி எள்ளலாக பேசினார் எம்ஆர் வெங்கடேஷ். ஆர்.கே. சண்முகம் செட்டியார் என்றுதான் அவர் அழைக்கப்பட்டார்... ஆனால் முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அப்படி ஜாதியின் பெயரால் அறியப்பட்டவர் அல்ல.
அவரை ஜாதிய வட்டத்துக்குள் சுருக்கி எம்.ஆர். வெங்கடேஷ் கிண்டலாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications