அதிமுக சார்பில் போட்டியிட இந்த 23 கேள்விகளுக்கும் பதில் தெரியணுமாம்... வாட்ஸ்ஆப்பில் லகலக!
சென்னை: உலகத்தில் எது நடந்தாலும், அதை உடனடியாக கலாய்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இணையத்தில் காத்திருக்கிறது.
அவற்றில் சில சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கும். சமூகத்தின் அவலத்தை சாட்டையடி கொடுப்பதாகவும் சில இருக்கும்.

அப்படியாக, அதிமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளது தொடர்பாக கண்ணில் ஒரு பதிவு பட்டது.
இதோ அது உங்களுக்காக...
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், 23 வகையான கேள்விகளுக்கு, பதில் கேட்கப்படுகிறது
# என்னா கேள்வியா இருக்கும்?
1. முதுகு எவ்வளவு தூரம் வளையும்?
2. ஒரு மணி நேரத்தில எத்தனை ஸ்டிக்கர் ஒட்டமுடியும்?
3. "புரட்சித்தலைவி, இதயதெய்வம், கழக நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர், தங்கத்தாரகை, வருங்கால பாரத பிரதமர், அம்மா" இதை இடைவிடாம எத்தனை தடவை சொல்லமுடியும்?
4. காருக்கு பின்னாடி ஓடத்தெரியுமா?
5. வேன்-ல தொங்கத்தெரியுமா?
6. ஹெலிகாப்டருக்கு பின்னாடியே பறக்கத்தெரியுமா?
7. மீடியாகாரங்களை கண்டா ஓடத்தெரியுமா?
8. 110 -ன்னா என்னன்னு தெரியுமா?
9. 1100-ன்னா என்னன்னு தெரியுமா?
10. 11000-ன்னா என்னன்னு தெரியுமா? (புதுசா கொண்டுவருவோம்யா...)
11. காவடி எடுக்கத் தெரியுமா?
12. தீ மிதிக்கத் தெரியுமா?
13. மண் சோறு சாப்பிடத் தெரியுமா?
14. அலகு குத்திட்டு அழுகாம இருக்கத் தெரியுமா?
15. கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யத் தெரியுமா?
16. அடுத்தவங்க பேனரை டர்ர்ர்-ன்னு கிழிக்க தெரியுமா?
17. மினிஸ்டர் பதவி போச்சுன்னாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கத் தெரியுமா?
18. ஜெயிலுக்கு முன்னாடி நாள் கணக்கா உட்கார்த்திட்டு இருக்க முடியுமா?
19. டிவி விவாதத்துக்கு போயிட்டு வாயை மூடிட்டு இருக்க முடியுமா?
20. தரையில விழுந்து உருளத் தெரியுமா?
21. தாடி வளர்க்கத் தெரியுமா?
22. பதவியேற்கும் போது கதறிக் கதறி அழுகத் தெரியுமா?
23. மொதல்ல இந்த கேள்விகளை எல்லாம் படிக்கத் தெரியுமா?
என இவ்வாறு அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இதையும் ஒன்றைக் கூடுதலாகச் சேர்த்திருக்கலாம் என்பது நமது தாழ்மையான கருத்து. அது...
நொடிக்கொரு தடவை ‘அம்மாவுக்கு நன்றி' எனச் சொல்லத் தெரியுமா?
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications