எங்கமா ராணுவத்தை உருவாக்குறாங்க பிரியாணி அண்டாவதான் தூக்குறாங்க.. மோகன் பகவத்தை விளாசும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மோகன் பகவத் பெருமை பேச்சு!- வீடியோ

  சென்னை: ராணுவத்தை ஆர்எஸ்எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு பேசிய மோகன் பகவத்தை நெட்டிசன்கள் காட்டமாக கலாய்த்து வருகின்றனர்.

  நாட்டிற்காக போரிட ராணுவத்தை விட 3 நாளில் போருக்குத் தயாராகிவிடும் திறன் படைத்தது ஆர்எஸ்எஸ் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவத்துள்ளார். மோகன் பகவத்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  மோகன் பகவத்தின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் கருத்துக்களை பகீர்ந்து வருகின்றனர்.

  அண்டாவதான் தூக்குறாங்க

  மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கவல்லது ஆர்.எஸ்.எஸ் - மோகன் பகவத் #
  எங்கமா ராணுவத்தை உருவாக்குறாங்க பிரியாணி அண்டாவதான் தூக்குறாங்க.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

  அண்டாவ திருட கூப்பிடல

  இந்திய ராணுவத்தை விட ஆர்எஸ்எஸ் 3 நாளில் போருக்கு தயாராகி விடும் - மோகன் பகவத்
  மக்கள் : அங்க ஒன்னும் பிரியாணி அண்டாவ திருட கூப்புடல... என்கிறது இந்த டிவிட்

  எங்களுக்கு தெரியும்

  இந்திய‌ ராணுவ‌த்தை விட‌ 3 நாளில் ஆர்எஸ்எஸ் போருக்கு த‌யாராகிவிடும் -மோக‌ன் ப‌க‌வ‌த்
  உங்கள் வீரம் வெள்ளைக்காரனிடம் எப்படி பட்டது என்பது எங்களுக்கு தெரியும்.. என கிண்டலடிக்கிறார்.. இந்த நெட்டிசன்

  இதுக்காகவே போர் வரனும்

  மூன்றே நாட்களில் ஒரு ராணுவத்தையே உருவாக்கவல்லது ஆர்.எஸ்.எஸ்: மோகன் பகவத்
  இதுக்காகவே சீனா கூட ஒரு போர் வரனும் , சங்கிக கூட்டத்தை மொத்தமா கூட்டிட்டு போய் போர் முனையில் விடணும் அதுக்கப்புறம் நாடு எவ்ளோ அமைதியா இருக்கும் தெரியுமா? என கேட்கிறார் இந்த நெட்டிசன்

  அண்டாவை வைத்தால் போதும்

  ராணுவம் போருக்குத் தயாராக மாதங்கள் பிடிக்கும் , RSS சில நாட்களிலேயே தயாராகி விடும் - மோகன் பகவத்
  எல்லையில் ஒரு பிரியாணி அண்டாவை மட்டும் வைத்தால் போதும்.. என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்

  இதெல்லாம் பெருமையா?

  ராணுவம் போருக்குத் தயாராக ஆறு மாதம் ஆகும்.
  ஆர். எஸ். எஸ் தயாராக 3 நாட்கள் போதும். : மோகன் பகவத்
  ஒரு அழுகிய பிணம் இருந்தால், சில மணிநேரங்களில் லட்சக்கணக்கான புழுக்கள் வந்துவிடும். ஒரே நாளில் தொற்று நோய்களை பரப்ப ஆரம்பித்துவிடும். இதெல்லாம் ஒரு பெருமையா பகவத்து... என கேட்கிறார் இந்த நெட்டிசன்

  பிரிட்டிஷ் சர்க்கார்

  இந்திய‌ ராணுவ‌த்தை விட‌ 3 நாளில் RSS போருக்கு த‌யாராகிவிடும் -மோக‌ன் ப‌க‌வ‌த்
  அது ச‌ரி சுத‌ந்திர‌ போரில் நீங்க‌ள் எத்த‌னை பேர் க‌ல‌ந்து கொண்டீர்க‌ள்?
  அது வ‌ந்து அப்ப‌ எங்க‌ முழ‌க்க‌ம் பிரிட்டிஷ் ச‌ர்க்கார் ஹி ஜே என‌ இருந்த‌து.. என்று கலாயக்கிறது இந்த டிவிட்

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  RSS leader Mohan Bhagawat comparing army with Rss. This became controvesy now. Netizens making fun of Mohan bhagawat on social media.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற