இன்று தமிழ்நாட்டுக்கு கிரகணம் சூரியனை செவ்வாய் மறைத்த தினம்.. நெட்டிசன்ஸ் உருக்கம்!
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானார். அவரது உடல் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதியின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் கருணாநிதிக்கு நெட்டிசன்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
|
உன் புகழ் வாழும்
#Karunanithi அன்னை தமிழின் மடியில் இளைப்பாற புறப்பட்ட திருக்குவளையே... நூறாண்டு காலம் வாழ ஆசைப்பட்டாய்... ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளாக உன் புகழ் வாழும்...
|
உதயசூரியன் விடிந்தது
தமிழகத்தின் சூரியனை காண உதயசூரியன் விடிந்தது கண்ணீருடன்(மழை)
|
உயிரினும் மேலான..
இனி எங்கு கேட்பேன் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற சிம்மக்குரலை* எனது உயிரே எனது உயிரே
|
கார்பன் காப்பி
கடின உழைப்பின் கார்பன்
காப்பி இன்று கல்லறைக்கு
செல்கிறது #karunanithi
# கருணாநிதி
|
காக்க வைத்துவிட்டாயே
ஒரு நல்ல தலைவருக்காக ஒரு யுகமே தேவை!! எங்களை இன்னொரு யுகம் காக்க வைத்துவிட்டாயே தலைவா
|
செவ்வாய் மறைத்த தினம்
R.I.P #Karunanithi tallest leader of India...இன்று தமிழ்நாட்டுக்கு கிரகணம் சூரியனை செவ்வாய் மறைத்த தினம்....
தலைவா நீ கற்று தந்த தமிழ் என்றும் சாகாது...
|
சூரியனை கைமறைப்பார் இல்லை
இனி வரலாறு
எவர் வாழ்க்கையை
இவர் வாழ்க்கை போல்
சுவாரசியமாய் எழுதிட முடியும்?
சூரியனை கைமறைப்பார் இல்லை.
இந்த சூரியனின் புகழை தொண்டை
எவரும் மறந்திடவும் முடியாது மறைத்திடவும் முடியாது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications