இப்படி ஒருமுறையாவது ஜெயலலிதாவை காட்டியிருக்கலாம்.. சல்யூட் திமுக! #கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியிடப்பட்டிருப்பதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைவு காரணமாக அவர் நேற்று அதிகாலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.
அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர். மருத்துவமனைக்கு வந்த அவரை மு.க.ஸ்டாலின் மருத்துவமனையின் வாயிலுக்கு வந்து உள்ளே அழைத்து சென்றார்.

போட்டோ வெளியீடு
இதையடுத்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் வெங்கையா நாயுடு விசாரித்தார். இந்நிலையில் கருணாநிதியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேரில் பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

பாராட்டு
புகைப்படத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஸ்டாலின், கனிமொழி, ராஜாத்தியம்மாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில் ஒளிமறைவின்றி புகைப்படம் வெளியிட்ட திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தாரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
|
போற்றுதற்குரியது
கலைஞர் கருணாநிதி குடும்பத்தினரின்.....
மூடுமந்திரம் இல்லாத... வெளிப்படையான இந்த செயல் போற்றுதற்குரியது...
ஜெயலலிதா அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்திருதால் அவரது சிகிச்சையும் இப்படி வெளிப்படை தன்மை கொண்டதாக இருந்திருக்கலாம்..
ஏன்காப்பாற்றப்பட்டு இருக்கலாம்.
|
ஆதாரம்
கருணாநிதி அவர்கள் மரணமடையவில்லை என்பதற்கு ஆதாரம்
|
அதிகாரபூர்வ வெளியீடு
தலைவரின் சிகிச்சை பெறும் படம்... அதிகார பூர்வ வெளியீடு... கலைஞர்
|
உதிப்பார் உதயசூரியனாய் !
கருணாநிதி அவர்களின் இன்றைய புகைப்படம் மூலம் அவரது உடல்நிலை சீராக இருக்கிறது
Pulse rate 94
Saturation 97
Respiratory rate 30 ( 15-18 இருந்தால் நன்று)
கடைசியாக உள்ள மூச்சு விடுதல் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மூச்சு திணறல் ஏற்படலாம்.
மற்றபடி உதிப்பார் உதயசூரியனாய் !!
|
நலமோடி சுவாசிக்கிறார்
இந்த படம் சற்று நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது, முன்னாள் முதல்வர் ஐயா #கருணாநிதி நலமாக இருக்கின்றார், முதுமை மட்டுமே முதுமையிலும் மருத்துவமனையில் எந்த சுவாச கருவிகளும் இல்லாமல் நலமோடு சுவாசிக்கின்றார்.
|
இயற்கையாக சுவாசிக்கிறார்
கருணாநிதி ஐயா நலம்... எந்த வித சுவாச கருவியும் இல்லாமல் இயற்கையாக சுவாசிக்கிறார்..
|
இயல்பான நிலையில்
கருணாநிதி புகைப்படம் வெளியீடு ....
இயல்பான நிலையில் கருணாநிதி இருப்பது புகைப்படம் காட்டுகிறது...!!
|
சல்யூட் திமுக
இப்படி ஒருமுறையாவது அம்மா அவர்களை காட்டி இருக்கலாம்..
சல்யூட் திமுக












Click it and Unblock the Notifications