டேட்டா கட்டண உயர்வு: மொபைல் இன்டெர்நெட்டை நாளை ஒருநாள் 'கட்' செய்து போராட அழைப்பு
சென்னை: செல்போன்களின் இணையதள டேட்டா-பேக் கட்டண உயர்வை கண்டித்து நாளை ஒருநாள் செல்போன் இன்டெர்நெட் இணைப்பை துண்டித்து போராட சமூக வலைத்தளங்களில் உள்ள பலரும் முடிவு செய்துள்ளனர்.
கட்டண உயர்வுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன்கூடிய மெசேஜ், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்ற சமூக தளங்களில் தீயாய் பரவி வருகிறது. வாய்ஸ் மெசேஜ்களும் வாட்ஸ்-அப்பில் வருகின்றன.

அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: நாம் உபயோகிக்கும் மொபைல் நெட்வொர்க்கின் டேட்டா பேக்கேஜ், ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB என்ற அளவில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி டேட்டாவை 900 MBயாக குறைத்தனர்.
இப்போது ரூ.128க்கு 1GB, 2G டேட்டாவை 28 நாட்களுக்கு அளிப்பதாக பல நிறுவனங்கள் கூறுகின்றன. அக். 31ல் எல்லோரும் செல்போன் இன்டெர்நெட்டை துண்டித்து போராட பேஸ்புக்கில் தீயாய் பரவும் வேண்டுகோள் ரூ.128 க்கு கிடைத்த 3G, 30 நாள் டேட்டா பேக்கேஜ் தற்போது ரூ.198ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே நெட்வொர்க் நிறுவனங்கள், டேட்டா பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டுள்ளன.
நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று இவர்களுக்கு தெரியும். ஆனால் அது உண்மையல்ல.
நாம் இந்தியர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், இம்மாதம் 31ம்தேதி வெள்ளிக்கிழமையன்று மொபைல் டேட்டாக்களை முற்றிலும் ஆப் செய்து நமது எதிர்ப்பை வெளியிடுவோம். அக்டோபர் 31ம்தேதி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்பபட்டுள்ளது. ஆகவே 31ம்தேதி யாரும் மொபைல் இணையத்தை உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் பார்வேர்ட் செய்யவும்.
(Vote: கட்டண உயர்வுக்கு எதிராக அக். 31ம் தேதி உங்கள் செல்போன் இன்டெர்நெட் இணைப்பை கட் செய்வீர்களா?)
வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை நிராகரிப்பு செய்ய வேண்டாம், நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயற்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். இவ்வாறு அந்த தகவலில் இடம்பெற்றுள்ளது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் இந்த தகவலை பகிருமாறும் அதில் வேண்டி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications