சசிகலாவை தேர்வு செய்த உங்க தொகுதி அதிமுக எம்எல்ஏவிடம் கோபக்கணைகளை வீசுங்கள்- நெட்டிசன்கள்
சசிகலாவை விமர்சித்து வரும் நெட்டிசன்களின் கோபம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது திரும்பியுள்ளது.
சென்னை: சசிகலா மீதான விமர்சனங்களை கைவிட்டுவிட்டு அவரை முதல்வராக தேர்வு செய்த நீங்கள் வாக்களித்த உங்கள் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.விடம் கோபக் கணைகளை வீசுங்கள் என்கிற நெட்டிசன்களின் பதிவுகள் வைரலாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதை அந்த கட்சி தொண்டர்கள் எவருமே சகிக்கவில்லை. தற்போது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை ஒட்டுமொத்த தமிழக மக்களுமே சசிக்கவில்லை.

ஆன்லைனில் மனு
சசிகலாவுக்கு எதிரான குரல்கள் நாளுக்கு நாள் வலுத்து கொண்டே வருகின்றன. சசிகலா முதல்வராவதைத் தடுக்க தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துங்கள் என்ற கோரிக்கையுடன் பல லட்சக்கணக்கானோர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆன்லைனில் மனு போட்டுக் கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள்
திரும்பிய திசையெங்கும் சசிகலா மீதான விமர்சனங்களே... தற்போது சமூக வலைதளங்களில் சசிகலாவை நீங்க ஏன் விமர்சிக்க வேண்டும்; அவரை முதல்வராக்கிய உங்க தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோபத்தை காட்டுங்கள் என்கிற நெட்டிசன்களின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் ஆகிக் கொண்டிருக்கிறது.

எம்.எல்.ஏவிடம் காட்டுங்கள்...
இது தொடர்பான பதிவில் இடம்பெற்றுள்ளதாவது: ஒரு சின்ன யோசனை. நாம் எல்லாரும் இப்படி சசிகலாவை திட்டி தீர்ப்பதைவிட அவரை அங்கீகரித்து அவரை முதல்வராக ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மக்களால் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தானே.... ஏன் ஒவ்வொரு தொகுதி மக்களும் ஒன்றுகூடி அவரவர் எம்.எல்.ஏ'வை நோக்கி உங்கள் கோவக்கனைகளை வீசக்கூடாது?? ஓட்டு போட்ட உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது அல்லவா?? #Sasikala #SasikalaNotMyCm #SasikalaForCm.. இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

அதிர்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள்
ஏற்கனவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மீது அவர்களது ஆதரவாளர்களே கடும் கோபத்தில் இருக்கின்றனர். தற்போது சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் கோபத்தை கொட்ட தொடங்கியுள்ளதால் அதிர்ந்து போயுள்ளது அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'கூட்டம்'.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications