'சேரி பிஹேவியர்'.... பிக்பாஸில் ஜாதி வெறியை கக்கிய காயத்ரி ரகுராம்- குவியும் கண்டனங்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாதிவெறியை கக்கிய காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜாதி வெறியை ஆக்ரோஷமாக கக்கிய காயத்ரி ரகுராமுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சி வக்கிரங்களின் குவியலாக இருக்கிறது என்பது பொது விமர்சனம். இப்போது ஜாதிவெறியை ஆக்ரோஷ்மாக கக்கும் கேவலமும் அரங்கேறியுள்ளது.
இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரமோவில், முகத்தை அகம்பாவமாக வைத்துக் கொண்டு 'சேரி பிஹேவியர்' என விஷத்தை கக்கியிருக்கிறார் காயத்ரி ரகுராம். அவரது இந்த விமர்சனத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
கண்டனங்களில் சில....

சேரியைத்தான் திட்டுவீர்களா?
Kavin Malar: சேரி பிஹேவியர் என்று ஓவியாவைப் பார்த்து சொல்கிறார் காயத்ரி.
இது ஸ்கிரிப்டட் நிகழ்ச்சியா இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் வைப்போம், இது எத்தகைய நிகழ்ச்சியாக இருந்தாலும் அதெப்படி ‘சேரி பிஹேவியர்' எனலாம்?
காயத்ரிக்கும், கமல்ஹாசனுக்கும், விஜய் டிவிக்கும் கடுமையான கண்டனங்கள்.
ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்றால் ஸ்கிரிப்ட் எழுதியவருக்கும், ஸ்கிரிப்டாக இருந்தாலும் அதைப் பேசி நடித்த காயத்ரிக்கும் கண்டனங்கள்.
இது டி.ஆர்.பி.க்காக செய்யப்படும் தந்திரம் என்றெல்லாம் சில நண்பர்கள் சொல்கிறார்கள். டி.ஆர்.பி.க்காக என்றாலும் சேரியைத்தான் திட்டுவீர்களா?

வழக்கு தொடர முடியுமா?
Dhana Sakthi with Kiruba Munusamy.: சேரி பிகேவியர் னு சொன்ன அந்த காயத்ரி மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் வழக்கு தொடுக்க முடியுமா கிருபா

தரம் தாழ்ந்து போகலாமா?
வெற்றி சங்கமித்ரா:
கமல்ஹாசன் காசுக்கு தரம் தாழ்ந்து போகலாமா ? சேரி பிகேவியர் (cheri behavior) என்று கிண்டலடிக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக தொடரலாமா ?

சேரி பிகேவியர் சரியே
ஸ்டாலின் தி: சேரி பிகேவியர்தான் சரியானது. சாதி ஆணவக்காரரான காயத்ரியை தொல்லைப்படுத்தும் சேரி பிகேவியர் ஓவியாவிடம் இருக்குமானால் அவருக்கு பாராட்டுகள்!
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications