நாளைக்கு டாஸ்மாக் லீவு.. இதுல புலி ரிலீஸ் சிக்கல்தான் பெரிய பிரச்சினையா? 'கொதிக்கும்' வலைவாசிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புலி படத்தின் நடிகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களின் வீடுகள், அலுவலகங்களை வருமான வரித்துறை அதிரடியாக நேற்று சோதனையிட்டது. நேற்று காலை தொடங்கிய சோதனை இரவு வரை தொடர்ந்தது. இந்த நிலையில் படத்தை க்யூபில் வெளியிடுவதற்கான கேடிஎம் எனப்படும் ரகசியக் குறியீடு யாருக்கும் வழங்கப்படவில்லை.

கடைசி நேர நிதி நெருக்கடி, தயாரிப்பாளர்களால் எங்கும் நகர முடியாத சூழல் காரணமாக படத்தை வெளியிடுவது தாமதமானது. இதனால் அதிகாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகள் ரத்தாகின.

திரையுலகின் பல முக்கியஸ்தர்கள் தலையீட்டுக்கு பிறகு புலி காலதாமதமாக இன்று காலை வெளியானது. இதற்கு நடுவே, எதிர்கோஷ்டியினர், டிவிட்டரில், புலி தாமதம் குறித்து கேலி செய்து டிவிட் வெளியிட்டு வந்தனர். அதில் பிறரை நோகடிக்காமல் நாசூக்காக சொல்லப்பட்ட சில நகைச்சுவைகளை பார்க்கலாம்:

விரட்டினார்களோ

புலியை முறத்தால் அடித்து விரட்டியவள் தமிழச்சி என்ற தமிழர்களின் வீரத்தை கூறும் பிரபல வாக்கியத்தை உதாரணம் காட்டி, இப்படி விரட்டிதான் புலி லேட்டாகிவிட்டது என கூறியுள்ளார்.

மறக்காதீர், மறந்தும் இருக்காதீர்

நாளை காந்தி ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை. புலி படத்தில் கவனம் வைத்து, பாட்டில்களை வீட்டில் வாங்கி வைத்துக்கொள்ள மறக்காதீர்கள் என்கிறார் தோட்டா.

வண்டலூர் சாவி

புலி ரிலீ்ஸ் ஆவது உறுதி என்ற தகவல் வந்த பிறகு ராஜ கணேஷ் என்பவர் வெளியிட்டுள்ள டிவிட் இது. வண்டலூர் உயிரியல் பூங்கா கேட் சாவி கிடைத்துவிட்டது போலும் என்கிறார் அவர்.

எங்க இருந்து ரிலீஸ் சாமி?

கவலை வேண்டாம் புலி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் கூறியதை செய்தியாக வெளியிட்ட ஒன்இந்தியாவின் டிவிட்டை ரீடிவிட் செய்து, எங்கே வண்டலூர் பூங்காவில் இருந்தா என கேட்டுள்ளார், இந்த வில்லாதி வில்லன்.

ஏம்ப்பா உனக்கு மட்டும்

அடுத்தடுத்து விஜய் படம் ரீலீஸ் நேரத்தில் தடங்கலுக்கு உள்ளாக்கப்படுவதையும், வேலையில்லா பட்டதாரி படத்தில், ஹீரோ தனுஷ் மட்டும் வேலைகிடைக்காமல் சுற்றுவதையும், ஒப்பிட்டு கொக்கி குமார் டிவிட் செய்துள்ளார்.

கொஞ்சம் ஓவரோ?

விஜய் ரசிகர்கள் புலி படத்தை கட்டாயம் பார்க்க வேண்டும். அப்போதுதான், படம் பார்க்கும் ஆசையை தவிர்த்து வாழ்க்கை நடத்துவார்கள் என்கிறார் சால்ட் அன்டு பெப்பர் தளபதி.

ஒவ்வொருவருக்கும் ஒரு கவலை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாளை டாஸ்மாக் கடைக்கு விடுமுறை என்பதால் கடுப்பில் இருப்போர் மத்தியில் படம் ரிலீசாகவில்லை என வருத்தப்படுகிறீர்களே... என கேட்கிறது இந்த டிவிட். அது சரி, அவரவர் கவலை அவரவர்க்கு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+