நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி, நடிகரால் அழியப்போகிறது.. கமலுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கொந்தளிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதை விமர்சனம் செய்த நடிகர் கமல்ஹாசனை, பல்வேறு அமைச்சர்களும் குறி வைத்து விமர்சனங்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

அதிலும் அமைச்சர் சி.வி.சண்முகம், கமலுக்கு எதிராக அஜித் ரசிகர்களை திருப்பிவிடும் வகையில் பேட்டி கொடுத்து பார்த்தார். ஆனால் தெளிவாக உள்ள ரசிகர்கள் அமைதியாக இதை வேடிக்கை பார்த்துக்கொண்டுள்ளனர்.

அதேநேரம், கமலை விமர்சனம் செய்யும் அமைச்சர்களை நெட்டிசன்கள் வறுக்க ஆரம்பித்துள்ளனர். பெரும்பாலான நெட்டிசன்கள் கருத்து கமலுக்கு ஆதரவாகவே உள்ளது. இது சமூகத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்படுகிறது.

Kamal Hassan has more responsibility says Karunas MLA-Oneindia Tamil

கூவத்தூர் ஏன்?

பணத்துக்காக கமல் எதையும் செய்வார் என அமைச்சர் கூறிய கருத்தை முன்வைத்து, நீங்கள் ஏன் கூவத்தூர் சென்றீர்கள் என கேட்கிறது இந்த மீம்.

நடிகராலே

ஒரு நடிகரால் ஆரம்பிக்கபட்டு, ஒரு நடிகையால் வளர்க்கப்பட்ட, ஒரு கட்சி, ஒரு நடிகராலே அழியப்போகிறது என்று எம்ஜிஆர் தொடங்கிய கட்சி கமலால்தான் காலியாகப்போவதாக கூறுகிறது இந்த டிவிட்.

கமல் போராட்டம்

"80களில் இலங்கை தமிழர்களுக்காக கமல் வீதியில் போராடி தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தபோது" எனக்கூறுகிறது இந்த டிவிட். கமல் கலாசாரத்தை சீரழிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு இந்த பழைய படத்தை வைத்து பதிலடி.

நீங்களும் சும்மா இருந்தீங்களே

"அதான் அரசியல் தெரியாதுன்றான்ல, விட்டுருங்க, ரொம்ப அடிச்சா, எல்லாத்தையும் கத்துக்கிட்டு வந்து நிப்பான், தாங்கமாட்டீங்க - #கமல் பற்றி பாரதிராஜா" எனக்கூறுகிறது இந்த டிவிட். ஜெயலலிதா உயிரோடு இருந்த காலகட்டத்தில் கமலுக்கும் அதிமுக அரசுக்கும் சென்னை மழை வெள்ளம் தொடர்பான மோதலின்போது பாரதிராஜா கூறியதை இப்போது சுட்டிக்காட்டுகிறது இந்த டிவிட்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens troll TN ministers for targeting Kamal Hassan and memes on the roaund.
Please Wait while comments are loading...