"நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்"... அழகிரி பற்றி வலம் வரும் டுவிட்டர் கலாட்டாக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை தேர்தலில் ஜெயிக்காது- வீடியோ

  சென்னை : திமுக ஆர்கே நகர் தொகுதியில் தோல்வி அடைந்தது, செயல்தலைவர் ஸ்டாலின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி காட்டமான விமர்சனத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் அழகிரியின் கருத்துக்கு பலவிதமான பதில் கருத்துகள் டுவிட்டரில் பதியப்பட்டு வருகின்றன.

  திமுக செயல்தலைவராக ஸ்டாலின் இருக்கும் வரை எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூறி அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பினார் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டவருமான மு.க.அழகிரி. ஆர்கே நகரில் திமுக டெபாசிட் கூட வாங்காதது வெட்கக்கேடு என்கிற ரீதியில் அழகிரியின் பேச்சு இருந்தது.

  அழகிரியின் இந்த கருத்து செய்தி சேனல்களின் இன்றைய விவாதப் பொருளாக மாறியுள்ளன. செய்தி சேனல்கள் மட்டுமல்ல டுவிட்டரிலும் அழகிரியின் கருத்துக்கு பலரும் படுஸ்பீடாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

  நீங்க விஞ்ஞானி பாஸ்

  கட்சியை வலுப்படுத்துவதற்காக ஜிம்முக்கு செல்கிறார் ஸ்டாலின் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார். இதைக் குறிப்பிட்டு பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்சானி பாஸ் என்று கருத்து பதிவிட்டுள்ளார் இவர்.

  ஸ்கிரிப்பு பேசுது

  ஸ்டாலின் செயல்படாத தலைவர், அவர் இருக்கும் வரை திமுக ஜெயிக்காது என்று அழகிரி கூறி இருக்கிறார். இவர் பேசல மோடி கொடுத்த ஸ்கிரிப்ட் பேசுது...!

  3 திமுக உருவாகுமா?

  அழகிரி திரும்ப தலையெடுத்தால் திமுக தலைமைக்கு மும்முனைப் போட்டி ஏற்படும் போலயே என டுவீட்டியுள்ளார் இவர்.
  ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, அல்லது 3 திமுக! அ திமுக, ஸ திமுக, க திமுக என்று கிண்டல் செய்துள்ளார்.

  வரலாறு அப்படி

  அழகிரி திமுகவைப்பற்றி சொன்ன கருத்தை நான் வரவேற்கிறேன். ஏனெனில் அழகிரி சொன்னால் அதற்கு எதிர்மறையாகத்தான் நடக்கும் என்பது கடந்த கால அழகிரியின் வரலாறு.

  திருமங்கலம் பார்முலாவை மிஞ்சிட்டாருல்ல

  தினகரனை அழகிரி பாராட்டியிருக்கிறார். திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சுகிற வகையில் ஆர்.கே.நகர் பார்முலாவை அறிமுகப்படுத்தினால் பாராட்ட மாட்டாரா பின்னே.?

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Netizens trolling the comments of Azhagiri about RK Nagar elections and Stalin's lead. Here is some of the collections of twitter comments for Azhagiri's today's burst out interview.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  X