பாத்தீங்களா, கமல் அமைச்சரவை கூட ரெடி ஆகிடுச்சி..!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பாத்தீங்களா, கமல் அமைச்சரவை கூட ரெடி ஆகிடுச்சி..! | Oneindia Tamil

கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் வரவேற்று, தங்களுக்கே உரிய நகைச்சுவையோடு கலாய்த்து வருகின்றனர்.

சென்னை கமலின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் வரவேற்றும், கலாய்த்தும் வருகின்றனர்.

சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கை நிறுவன விழா ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வர தயார் என்றார்.

மேலும் ரஜினியுடன் இணைந்து செயல்படவும் தயார் என்றும் அவர் கூறினார். கமலின் இந்த பேச்சை வைத்து நெட்டிசன்கள் மீம்களை வெளியிட்டு மகிழ்ந்து வருகிறார்கள்.

அமைச்சரவை ரெடி

பாத்தீங்களா அமைச்சரவை கூட ரெடி ஆகிடுச்சி... என்கிறார் இந்த நெட்டிசன். கமல் அமைச்சரவை என்றால், அமைச்சர்கள் அத்தனை பேருமே கமலாகத்தான் இருப்பார். அவரே எல்லோருடைய வேஷத்தையும் போட்டுவிடுவார் என்கிறாி

அமுல் பேபி..

அமுல் பேபி கமல் சார ஹீரோவா தானே பார்த்திருப்ப.. இனி அரசியல்வாதியா பார்ப்ப.. என்கிறது இந்த மீம்..

அண்ணாத்த ஆடுறார்

அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ... என வெறியேற்றுகிறார் இந்த நெட்டிசன்..

வந்தா நல்லா இருக்கும்

நீங்க வர கூடாதுன்னு யாரும் சொல்லல, வந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்'அறம்'! என்கிறார் இந்த நெட்டிசன். கமல் டயலாக்கைதான் 'மாடிஃபை' செய்துள்ளார்.

நான்தானே தொடங்கனும்

சீன் சீக்ரெட்படி நான்தான் கட்சி தொடங்கனும் இவர் ஏன் தொடங்குறாரு? எனக் கேட்கிறது இந்த மீம். இந்த படத்தில் வரும் காட்சியை நினைவுபடுத்தினால் ஏன் இப்படி மீம் போட்டார் என்பது உங்களுக்கே புரியும்.

கமல்ஹாசன் ஆகிய நான்

இந்த தருணத்துக்காக காத்திருக்கிறோம்.. கமல்ஹாசன் ஆகிய நான்.. என்கிறார் இந்த நெட்டிசன்..

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kamal said that he will come to politics if people wants. Netizens making fun and welcoming Kamal comment on political arrival.
Please Wait while comments are loading...