Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சினிமா சான்ஸ்சுக்காக படுக்கையை பகிர்ந்ததில்லை, ஆனால்.. சுய சரிதையில் மனம் திறந்த ஷகீலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெறுவதற்காக யாரிடமும் படுக்கையை பகிர்ந்து கொண்டதில்லை என்று கவர்ச்சி நடிகை ஷகிலா தனது சுயசரிதை புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஷகிலாவின் சுயசரிதை புத்தகம், 'ஷகிலா (ஓர் இதயத்தின் உண்மைக் கதை)' என்ற பெயரில் ஸ்ரீபதி பத்மநாபாவின் தமிழாக்கத்தில், உயிர்மை பதிப்பக வெளியீடாக தமிழில் வந்துள்ளது. அதில் சில சுவாரசிய தகவல்களை ஷகிலா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பெரிய ஜாம்பவான் ஹீரோக்கள் திரைப்படங்களையே தியேட்டரை விட்டு வெளியே ஓட வைக்கும் அளவுக்கு ரசிகர் கூட்டத்தை, (ஆம் ரசிகர் கூட்டத்தை மட்டும்தான்) பெற்றிருந்தவர் ஷகிலா.

சில்க்குடன் முதல் படம்

சில்க்குடன் முதல் படம்

அவர் தனது சுய சரிதையில் கூறியுள்ளதாவது: சில்க் ஸ்மிதாவுடன் நான் இணைந்து நடித்த, ‘ப்ளே கேர்ள்ஸ்' என்ற என் முதல் படம் பாக்ஸ் ஆஃபீஸில் பெரிய ஹிட் ஆனதை எதிர்பார்க்கவேயில்லை., அந்த படத்தின் வெற்றி என்னை ஆனந்தத்தின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

புகழ்

புகழ்

அதுவரை கோடம்பாக்கத்தின் ஒரு சாதாரண இளம்பெண்ணாக இருந்த நான் தென்னிந்தியா முழுக்க அறியப்பட்டுவிட்டேன். சினிமாவின் அகராதியில், ஷகீலா என்ற பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது. இவ்வளவு பெரிய வெற்றியும், ஈர்ப்பும் எனக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

கெஞ்சியதில்லை

கெஞ்சியதில்லை

நடிப்புலகில் நுழையும்போது எனக்கு பதினேழு வயது நிறைந்திருந்தது. நடிப்பில் விருப்பமிருந்தும் அதுவரை நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டு செல்லவில்லை; யாருடைய காலையும் பிடிக்கவில்லை; ஆனாலும் சினிமா உலகம் என்னைத் தேடி வந்தது. மற்ற கஷ்ட நஷ்டங்கள் ஏதுமில்லாமல் சினிமாவில் நுழைய முடிந்ததற்காக கடவுளுக்கு நான் நன்றி சொன்னேன்.

அந்த ஒரு சந்தேகம்

அந்த ஒரு சந்தேகம்

உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், நான் நடிப்பது எல்லாம் செக்ஸ் சினிமாவில்தானே? உடம்பைக் காட்டுவதைத் தவிர அதில் என்ன நடிப்பு இருக்கிறது? வாழ்க்கையே பாழாகிவிடவில்லையா? பலபேரிடம் பலவிதமான சமரசங்களும் செய்ய வேண்டியிருந்திருக்குமே? இந்த விதங்களில் வந்த ஒரு நடிகை 'நான் கஷ்டப்படாமலேயே சினிமாவுக்கு வந்தேன்' என்று சொன்னால் எப்படி நம்புவது?

அதிருஷ்டம்தான்

அதிருஷ்டம்தான்

ஆனால், நான் வந்த வழி சரியான வழி. ஒரு வேளை அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்தது என்று சொல்லலாம். சினிமாவுக்கு வருவதற்கு முன்பும் சினிமாவில் புகழ்பெற்ற பின்பும் என் வாழ்க்கையில் 'சில விஷயங்கள்' நடந்திருக்கின்றன. ஆனால், சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக நான் எங்கேயும் இரையாகவில்லை.

ஆபத்தான துறை

ஆபத்தான துறை

சினிமா ரசிகர்களின், ஆர்வலர்களின் கருத்துப்படி சினிமா என்பது பெண்களைப் பொறுத்தவரை ஒரு ஆபத்தான துறைதான். சினிமாவில் நுழைந்துவிட்டால், ஒரு நடிகையாகிவிட்டால் அவளுடைய வாழ்க்கை அவ்வளவுதான் என்றொரு பேச்சு நம் சமூகத்தில் இருந்துவருகிறது. அதை நான் முழுக்க மறுக்கவில்லை. ஒரு எல்லை வரை அதில் உண்மையும் இருக்கிறது. அப்படிப்பட்ட சில பேரை எனக்கும் தெரியும்.

கோரிக்கை

கோரிக்கை

என் சினிமா பிரவேசத்திலும் அதன் பிறகான வாழ்க்கையிலும் சினிமாவின் பெயரால் ஒரு ஆபத்தும் எனக்கு நேர்ந்ததில்லை. எந்த இயக்குனரும் எந்த தயாரிப்பாளரும் கூடப் படுக்க என்னிடம் வேண்டுகோள் விடுத்ததில்லை. எந்த விதமான அட்ஜஸ்ட்மெண்ட்களுக்கும் உடன்பட நேர்ந்ததில்லை.

பாசமாக பழகுவார்கள்

பாசமாக பழகுவார்கள்

நடிக்கப் போவேன். திரும்பி வருவேன். எல்லோருடனும் சீக்கிரமாகவே நட்புக் கொண்டுவிடுவேன். அதனால் என்னிடம் மிக நேசத்துடன்தான் திரைத்துறையினர் பழகுகிறார்கள்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

ஒரு இடைத்தரகர் மூலமாகவோ பிம்ப் மூலமாகவோ இயக்குனரிடம் அல்லது தயாரிப்பாளரிடம் வாய்ப்புக் கேட்டுப் போனதில்லை. அப்படியெல்லாம் போயிருந்தால் படுக்கைக்கு அழைத்திருக்கும் சம்பவம் நடந்திருக்கலாம்.

குண்டு பாப்பா

குண்டு பாப்பா

நடிப்பு வெறி கொண்டு, வாழ்வதற்கு ஒரு வருமானத்திற்கான வழியைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டியிருக்கலாம். கொஞ்சம் பருமனான ஒரு சிறுமியிடம் பழகுவதைப் போலத்தான் என்னிடம் எல்லோரும் பழகினார்கள்.

அதெல்லாம் இல்லாமலா?

அதெல்லாம் இல்லாமலா?

அதற்காக பிற்காலத்தில் என் வாழ்க்கையில் காதலோ செக்ஸோ இருக்கவில்லை என்று அர்த்தமில்லை. ஆனால் அதெல்லாம் என்னுடைய விருப்பத்தின் பேரிலும் என்னுடைய கிளர்ச்சியின் பேரிலும் மட்டுமே நிகழ்ந்தது தவிர சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக அல்ல. இன்னொரு உண்மை என்னவென்றால், நான் காதலித்தவர்களில் பல பேர் சினிமாவுடன் அதிகத் தொடர்பில்லாதவர்கள் என்பதுதான். இவ்வாறு ஷகிலா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+