கிருஷ்ணகிரியிலும் கொடுமை- சாலையோரத்தில் வீசப்பட்ட ஆண்குழந்தை மீட்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலையோரத்தில் கிடந்த பிறந்த சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒரப்பம்-எலத்தகிரி சாலையில் உள்ள நாகம்பட்டி சந்திப்பு சாலை அருகிலுள்ள மேல் நிலை குடிநீர்த் தொட்டிக்கு அருகில் குடிநீர் வடிகால் வரிய அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்துக்கு இயக்குநர் சின்னசாமி வியாழக்கிழமை காலை சென்றபோது, சாலையோரத்தில் குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது. குழந்தையின் சத்தம் வந்த பகுதிக்கு சென்று அவர் பார்த்த போது, பிறந்த சில மணி நேரமேயான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுத்தப்பட்ட நிலையில் கிடந்தது. குழந்தையை கண்ட அவர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.
108-ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் கலைசெல்வி, ஓட்டுநர் கேசவன் ஆகியோர் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, சாலையோரம் கிடந்த அந்த குழந்தையை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீஸார், சுகாதாரத் துறை அலுவலர்கள் மூலம் பச்சிளம் ஆண் குழந்தையின் தாய் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மீட்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications