ஜெ.வைப் போலவே லிப்ட் வசதிகளுடன் தமிழிசைக்கும் புதிய பிரச்சார வேன் தயார்!
சென்னை: தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்காக லிப்ட் வசதியுடன் கோவையில் தயாரிக்கப்பட்ட புதிய பிரச்சார வேன் சென்னை வந்துள்ளது.
மக்களுக்காகவே நான் என பிரச்சாரங்களில் சொல்லிக் கொள்ளும் தலைவர்கள், தங்களுக்கான வசதிகளை பெரும்பாலும் விட்டுத்தர விரும்புவதில்லை. கொளுத்தும் வெயிலில் தொண்டர்கள் சாலையிலோ, பொதுக்கூட்ட மைதானத்திலோ காத்திருக்க, இவர்கள் ஒய்யாரமாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட வாகனங்களிலோ, மேடையிலோ நின்று ஆவேசமாகப் பேசுவார்கள்.

அந்தவகையில், வழக்கம்போல இம்முறையும் தலைவர்கள் பிரச்சார வாகனங்கலை தங்கள் வசதிக்கு ஏற்ப தயாரித்துள்ளனர்.
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் பிரச்சார வேனில் லிப்ட் வசதி இருக்கும். அதன் மூலம் நேரடியாக மேடைக்கு செல்ல முடியும். அதோடு, வேனின் நடுவே உள்ள மேடையில் நின்ற பின்னர் ஸ்விட்ச்சை போட்டால், லிப்ட் உயர்ந்து, மேற்கூரையில் வழியாக தோன்றி பேச வசதியாக இந்த லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அதைப் போலவே லிப்ட் வசதியுடன் கூடிய புதிய பிரச்சார வேன் ஒன்றை தயார் செய்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை. இந்த வேன் கோவையில் உருவாக்கப்பட்டது.
இதில், ஒரு ரோலிங் சேர், படுக்கை, நவீன கழிப்பிடம் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. குளிர்சாதன வசதி, அதிநவீன சஸ்பென்சன் வசதிகளும் அதில் உள்ளன.
இந்த பிரச்சார வேனின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடி இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், இது வெறும் ரூ. 50 லட்சம் தான் என்கின்றனர் பாஜகவினர்.
நாளை வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சார வேனில் தனது பிரச்சாரத்தை தமிழிசை துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications