வாசனா, அவர்தான் செத்துட்டாரே... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கிளப்பிய புதிய சர்ச்சை!
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இறந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் மோடி- முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக இளங்கோவன் அவதூறாகப் பேசியதாகத் தெரிவித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இளங்கோவனுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜி.கே.வாசன் இறந்துவிட்டார் என்று இளங்கோவன் கூறியது தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மது விலக்கை அமல்படுத்தக் கோரி ஆகஸ்ட் 14-ந் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர் ஒருவர் இளங்கோவனிடம், முதல்வர் ஜெயலலிதா வைத்துள்ள கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றித் தர வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளாரே என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு இளங்கோவன், வாசன்தான் இறந்துவிட்டாரே என்று கூறிவிட்டு செல்லத் தொடங்கினார். பிறகு சுதாரித்துக் கொண்டு நான் மறைந்த எஸ்.எஸ்.வாசனைத்தான் கூறினேன் என்று இளங்கோவன் சமாளித்தபடி கூறி சென்றார்.
இது தொடர்பான காட்சிகள் தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. இளங்கோவனின் கருத்துக்கு எதிராக த.மா.கா.வினர் கொந்தளித்து போயுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications