சட்ட படிப்பில் இளவரசி மகன் விவேக் ஃபிராடு? போட்டுக் கொடுத்ததா திவாகரன் தரப்பு?
சட்ட பல்கலைக் கழக படிப்பில் இளவரசி மகன் விவேக் முறைகேடு செய்தது தொடர்பாக விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: சட்ட பல்கலைக் கழகப் படிப்பில் இளவரசி மகன் விவேக் முறைகேடு செய்துள்ளதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இளவரசி மகன் விவேக் மீதான விசாரணையால் திவாகரன் தரப்பு ரொம்பவே மகிழ்ச்சியடைந்து போயுள்ளதாம்.
சசிகலா குடும்பத்தில் இளவரசி மகன் விவேக், திவாகரன் மகன் ஜெயானந்த் இடையேயான போட்டிதான் ரொம்பவே விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. அதிமுகவில் தினகரன் கை ஓங்கிய நிலையில் விவேக்கும் ஜெயானந்தும் பெங்களூருவுக்கு சென்று சசிகலாவிடம் மாறி மாறி முறையிட்டு வருகின்றனர்.

விவேக் vs ஜெயானந்த்
சசிகலாவோ விவேக்கை கொஞ்சம் அதிகமாகவே நம்புகிறாராம்.. என்னதான் திவாகரன் மகன் ஜெயானந்த் கொண்டு போய் கொடுக்கும் டிரான்ஸ்பர் உள்ளிட்ட சிபாரிசுகள் எதனையும் சசிகலா கண்டுகொள்வதே இல்லையாம். இதில் திவாகரன் தரப்பு ரொம்பவே அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சையில் விவேக்
இந்த நிலையில் விவேக் சென்னை சட்டப் பல்கலைக் கழகத்தில் தேர்வுகளை எழுதியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. சட்டப் பல்கலைக் கழகம் பக்கமே எட்டிப்பார்க்காத விவேக் எப்படி தேர்வு எழுதியிருக்க முடியும்? என்பதுதான் கேள்வி.

விசாரணைக்கு உத்தரவு
இது தொடர்பாக ஆளுநருக்கும் புகார் போனது. இதையடுத்து விவேக் மீதான புகார் குறித்து விசாரிக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவல் திவாகரன் தரப்பை ரொம்பவே மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளதாம்.

கருப்பு ஆடு யாரு?
அதேநேரத்தில் விவேக் தரப்போ, தம்மை பற்றி போட்டுக் கொடுத்த கருப்பு ஆடு யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்தவரை திவாகரன் தரப்புதான் போட்டுக் கொடுத்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கிறார்களாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications