புது 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் இன்று முதல் ஏடிஎம்மில் கிடைக்கும்- ரிசர்வ் வங்கி
புதிய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் ஏடிஎம்மில் எடுத்துக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா கூறியுள்ளார்.
சென்னை: ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் புது 2000 ரூபாய் விநியோகம் செய்யபட்டு வருகிறது என ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்து உள்ளார்.
சென்னை ரிசர்வ் வங்கியில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வாங்க கூட்டம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு குறித்து காவல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை ஆணையர் சேஷாயி, ஸ்ரீதர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுக்களை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இந்நிலையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை குறைக்க வெள்ளிக்கிழமை முதல் ஏடிஎம்களில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட வரிசையில் மக்கள்
புதன்கிழமை வங்கி விடுமுறை விட்டு வியாழக்கிழமை வங்கி திறக்கபட்டு இருந்தது. தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்காக, நாடு முழுவதும் வங்கிகள் முன்பு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றிச் சென்றனர்.

குவிந்த மக்கள்
வியாழக்கிழமை காலை 8 மணி முதலே ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன் மக்கள் குவிந்தனர். நாட்டின் தலைநகரங்கள் உட்பட பல்வேறு நகரங்கள் மற்றும் வங்கிக்கிளைகள் உள்ள இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வங்கிகள் முன்பு வரிசையில் மக்கள் கூட்டம் கூட்டமாக அணிவகுத்து நின்றனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பு
சென்னை ரிசர்வ் வங்கியில் பொதுமக்கள் வரிசையில் செல்வதற்காக பேரிகார்ட் அமைக்கப்பட்டிருந்தது. சென்னை ரிசர்வ் வங்கியில் துணை ஆணையர் தலைமையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எட்டு சிறப்பு கவுண்டர்கள் வாயிலாக நோட்டுகளை மாற்றிக்கொள்ள கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆர்.பி.ஐ மண்டல இயக்குநர்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா, ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் புதிய நோட்டுக்கள் அனுப்பப்பட்டு உள்ளன. ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் புது 2000 ரூபாய் விநியோகம் செய்யபட்டு வருகிறது என கூறினார்.
தமிழகத்தில் இன்று முதல் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வங்கி ஏடிஎம்களில் எடுத்து கொள்ளலாம் என சென்னை ஆர்.பி.ஐ. மண்டல இயக்குனர் சதக்கத்துல்லா தெரிவித்துள்ளார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
இந்திய ரூபாய் நோட்டுகள் மொத்தமாக மாறப்போகுது! ரிசர்வ் வங்கியின் அதிரடி திட்டம்! இனி கிழியவே கிழியாது -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications