அந்தமான் அருகில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஹெலன் புயல் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்கி நகர்ந்து வந்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ இன்று பெய்யும். சென்னையைப் பொருத்தவரையில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழை பெய்யும்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் சிவகிரியில் 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கோவில்பட்டி, புதுச்சேரியில் 40 மி.மீ. மழையும், திண்டிவனம், தக்கலையில் 30 மழையும் பதிவாகியுள்ளது.
உத்திரமேரூர், குழித்துறை, மணியாச்சி, நாகர்கோவில், கடலூர், பேச்சிப்பாறையில் 20 மி.மீ., மதுராந்தகம், வந்தவாசி, பூதபாண்டி, மரக்காணம், ஸ்ரீவைகுண்டம், குளச்சல், வால்பாறை, விளாத்திகுளத்தி 10 மி.மீ. ஆகிய பகுதிகளிலும் மழை பெய்துள்ளது.
லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி
இதனிடையே அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications