வருது வருது.. புதுசா ஒரு காற்றழுத்தம் வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி வருது.. வானிலை மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 8ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை வரை வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் வரும் 7ஆம் தேதி தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம் இதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

சென்னை வானிலை மையம்
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக கூறினார்.

புயலாக உருவெடுக்கும்
அடுத்த 2 அல்லது 3 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் புயலாக உருவெடுக்கும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஓமன் நோக்கி வடமேற்கு திசையில் நகரும்.

பலத்த காற்று வீசும்
இதனால் அரபிக்கடல் கொந்தளிப்புடன் காணப்படும். கடற்பகுதியில் பலத்த காற்று வீசும். இதன் காரணமாக மீனவர்கள் வரும் 8 ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்.

வங்கக்கடலில் காற்றழுத்தம்
மேலும் வரும் அக்டோபர் 8ஆம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். தெற்கு வங்கக்கடலில் இந்த புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications