ஆட்சி கவிழ்ப்பின் பெயரில் அடேங்கப்பா வசூலாமே!
ஆட்சி கவிழ்ப்பின் பெயரில் அடேங்கப்பா வசூல் வேட்டை நடந்ததுதான் இப்போதைய பரபரப்பு செய்தி.
யாரோ ஒருத்தர் எப்படியும் ஆட்சிக்கான பியூஸை பிடுங்கிடுவாங்க... எப்படியும் நாற்காலி கவிழ்ந்துவிடும் என இலவு காத்த கிளிகள் காத்திருக்கின்றன.
இத்தகைய கிளிகளில் ஒன்று ஆட்சியைக் கவிழ்க்க நாமே களமிறங்குவோம் என ஒரு வியூகம் வகுத்தது. மொத்தம் 33 பேருக்கு குறிவைத்து ரேட்டும் பிக்ஸ் செய்திருக்கிறார்கள்.

இந்த 33 பேருக்குமான அமவுண்ட்டை செட்டில் செய்ய சில "பாளையக்காரர்கள்" பிக்ஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் பசையான பவுசு பதவி கிடைக்கும் என்கிற நப்பாசையில் பதுக்கி வைத்ததை பாயவிட்டு கப்பம் கட்டியிருக்கிறார்கள்.
இப்படியான வசூல் எல்லாம் முடிவடைந்து 3 மாதங்கள் ஓடிவிட்டன. ஆனால் யாரும் பியூஸையும் பிடுங்கலை... நாற்காலியையும் கவிழ்க்கவில்லை.
நினைப்புக்கு எதிராக, பெவிகால் போட்டு ஒட்டியதைவிட படு ஸ்டிராங்காக ஆட்சி நடந்து வருகிறது. இதனால் கப்பம் செலுத்திய பாளையக்காரர்கள் மென்று விழுங்கியபடியே கொடுத்தது திருப்பி கிடைக்குமா என தேவுடு காத்திருக்கிறார்களாம்.
அவர்களுக்கும் தெரியும்... போன பணம் எப்படியும் திரும்பி வராது என... இருந்தாலும் நப்பாசையில் நச்சரித்துப் பார்க்கிறார்களாம்...!
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications