இனிதான் எல்லாம்... துவங்கியது ஸ்டாலினின் தனித்த அரசியல் போராட்டம்!
தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை இழந்து இருக்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் அரசியல் போராட்டம் தற்போதுதான் உண்மையாக தொடங்கி இருக்கிறது.
Recommended Video

சென்னை: தனது தந்தையும், திமுக தலைவருமான கருணாநிதியை இழந்து இருக்கும் திமுக செயல்தலைவர் ஸ்டாலினின் அரசியல் போராட்டம் தற்போதுதான் உண்மையாக தொடங்கி இருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். தற்போது அவரது இறுதி சடங்கு பணிகள் நடந்து வருகிறது. உலகம் முழுக்க தலைவர்கள் அவருக்காக கண்ணீர் விட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அண்ணா சமாதிக்கு பின் கருணாநிதியை அடக்கம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனைதான் ஸ்டாலின் கருணாநிதி இல்லாமல் எதிர்கொள்ளும் முதல் பிரச்சனை ஆகும்.

சிறுவயதில் போராட்டம்
ஸ்டாலினின் அரசியல் போராட்டம் இப்போது தொடங்கியது கிடையாது. சிறு வயதிலேயே திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறார் அவர். மீசாவின் போதே சிறை சென்று கஷ்டப்பட்டு இருக்கிறார். வரிசையாக பல முறை போராட்டம் செய்து சிறைக்கு சென்று இருக்கிறார். இதெல்லாம் கட்சியில் பெரிய நபராக ஆகும் முன் செய்த போராட்டம் ஆகும்.

செயல்தலைவர் ஆன பின் போராட்டம்
அதற்கு அடுத்துதான் ஸ்டாலினின் மிக முக்கியமான அரசியல் போராட்டம் துவங்கியது. திமுகவின் செயல்தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் ஆயிரத்திற்கும் அதிகமான போராட்டம் நடத்தினார். மோடி தொடங்கி ஆளுநர் வரை அனைவருக்கும் கருப்பு கொடி காட்டினார். உலக அளவில் கருப்பு கொடி காட்டி ஒரே நாளில் டிரெண்ட் ஆனார். இதுதான் இதுவரை இவர் செய்த பெரிய அரசியல் போராட்டங்கள்.

உண்மையான போராட்டம் துவங்கியது
ஆனால் இப்போது அரசியலில் ஸ்டாலின் பெரிய அளவில் தனித்துவிடப்பட்ட இருக்கிறார். திமுகவில் பெரிய தலைவர்களாக இருந்தவர்கள் வயது முதிர்வில் அவதிப்பட்டு வருகிறார்கள். இளைஞர் படையையும், சில முக்கிய தலைகளின் உதவியுடனும் அவர் கட்சியை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். இனி வரும் காலத்தில், தனித்த அரசியல் தலைவராக, கருணாநிதி இல்லாமல் ஸ்டாலின் கட்சியை நடத்த வேண்டி இருக்கும்.

முதல் போராட்டம்
ஸ்டாலினின் முதல் போராட்டமே கருணாநிதிக்காக என்பதுதான் இதில் சோகமான விஷயம். என்ன நடந்தாலும் திமுக தலைவரை மெரினாவில்தான் புதைப்பேன் என்று இன்று காலை ஸ்டாலின் உறுதியாக இருந்தார். இந்த போராட்ட குணம்தான் திமுகவின் ஆணி வேர். அதை தற்போது ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார். 30 வருடத்திற்கும் மேலான ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் இதுதான் இரண்டாவது அத்தியாயம். அப்பாவிற்காக போராடியதுதான் அதன் தொடக்கம் என்று வரலாறு பேசும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications