புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் நேற்று இரவில் இருந்து அநேக இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் தேங்கி வருகிறது. மழைநீர் தேங்கி வருவதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னை மட்டுமல்லாது அதன், சுற்றுப்புறங்களிலும் மழை பெய்து வருவதால், ஏற்கனவே தேங்கிய வெள்ளநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம், கரூர், அருப்புக்கோட்டை, விழுப்புரம், திண்டுக்கல் மற்றும் புதுச்சேரியிலும் பலத்த மழை பெய்தது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, இலங்கைக்கு அருகே, தென்மேற்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை முதல் மிக அதிக கன மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்தார். இந்த புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறு பகுதியில் 9 செ.மீட்டரும் நாங்குநேரியில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications