போயஸ் தோட்டத்து 'ரியல் பவர் ஸ்டார்கள்'.. சசிகலாவை ஓரங்கட்டும் இளவரசி?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் சசிகலாவின் உறவினர்களில் இளம் ரத்தங்கள்தான் இப்போது கோலோச்சிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் முதல் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமர்ந்திருந்தாலும் சசிகலாவுக்கு அருகே அமர்ந்திருந்த இளம் பவர் ஸ்டார்கள் யார் என்பதுதான் படு சூடான விவாதமாக ஓடிக் கொண்டிருந்தது..

அவங்களா?
சசிகலாவுக்கு அருகே இருப்பவரைப் பார்த்தால் 'திவாகரன்' சாயல் இருக்கிறதே.. அதற்கு அடுத்து அமர்ந்திருப்பது 'இளவரசியின் மகளோ'

இல்லைங்க..இவங்கதான்..
இல்லை இல்லை. ரஜினிக்கு அருகே அமர்ந்திருப்பதுதான் இளவரசி குடும்பம்.. இல்லங்கை.. இளவரசி மகள், மகன் குடும்பம் அது.. இப்படித்தான் பட்டிமன்றம் களைகட்டி ஓடிக் கொண்டிருந்தது..

இளவரசி குடும்பம்?
இந்த நிலையில், சசிகலாவுக்கு அருகே அமர்ந்திருந்தது அவரது அண்ணன் சுந்தரவதனத்தின் மகள் பிரபாவதி மற்றும் அவரது கணவர் டாக்டர் சிவகுமார் என்றும் ஒரு தகவல். இவர்களுக்கு அடுத்ததாக கோட் போட்டு அமர்ந்திருந்தது டாக்டர் கார்த்திக்; அவருக்கு அருகில் இருந்தது இளவரசி மகள் பிரியாவும் அவரது கணவர் கார்த்திகேயனும் என்றும் ஒரு தகவல் கூறப்பட்டது. இந்த டாக்டர்கள் சிவகுமார், கார்த்திதான் ஜெயலலிதாவின் ஆஸ்தான மருத்துவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

"கவியரசு" பெயர் கொண்டவர் மகன்
ஆனால் இன்னொரு தரப்போ சசிகலாவுக்கு அருகே அமர்ந்தது இளவரசியின் 'கோ பிரதரின் மகன்'.. அவரது அப்பா "கவியரசுவின் பெயரைக் கொண்டவர்" எனவும் தமிழக அரசில் பணிபுரிவதாகவும் கூறுகிறது..

ஓங்கியதா இளவரசி கை?
அதே நேரத்தில் சசிகலாவுக்கு அருகே முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரையிலான நாற்காலியில் அமர்ந்திருந்தது அனைவருமே 'இளவரசி' குடும்பம்தான்.. இப்போது சசிகலாவை விட இளவரசியும் அவரது குடும்பத்தாரும்தான் போயஸ் தோட்டத்து ரியல் பவர் ஸ்டார்கள்..
ஆக இளம் ரத்தத்துடன் போயஸ் தோட்டத்து புதிய மன்னர்கள் கோலோச்சுகிறார்கள்!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications