நாடாளுமன்ற கட்டிடம் பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா.. ஆஹா இந்த "ஆங்கிளில்" யாரும் யோசிக்கலியே!
சென்னை: முக்கோன வடிவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்த நிலையில், அதன் வடிவத்தை வேறு கோணத்தில் பார்த்து இருக்கிறார் பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி. இது லிஸ்ட்லயே இல்லையே என்று பலரையும் சிந்திக்க வைத்துள்ளது அவரது பதிவு.
கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லி பழைய நாடாளுமன்ற வளாகம் அருகே புதிய நாடாளுமன்றத்தை கட்டும் பணிக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி வைத்தார். இந்த நிலையில் முக்கோண வடிவிலான அந்த நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதிய நாடாளுமன்றத்தை திறந்து வைத்து இருக்கிறார்.

இந்த புதிய நாடாளுமன்றத்தின் வசதிகள், கட்டுமானக் கலை பற்றி பல்வேறு பாராட்டுக்களும் விமர்சனங்களும் எழுந்து இருக்கின்றன. குறிப்பாக பிரதமர் மோடி ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட புதிய நாடாளுமன்றத்தின் வீடியோவை பார்த்து பலரும் வியந்துபோயினர். அதன் கட்டுமானக் கலை குறித்து பல்வேறு கருத்துக்களும் பகிரப்பட்டன.
டிரோன் மூலம் புதிய நாடாளுமன்ற கட்டிடம், மக்களவை மற்றும் மாநிலங்களவை அரங்குகளின் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. அப்போது இரு அவைகளின் இருக்கை அமைப்பும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தைபோல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்திட்டு வந்தனர்.
இந்த நிலையில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, "தேசிய பறவையான மயில் போன்ற அமைப்பில் லோக் சபா அரங்கு உருவாக்கப்பட்டது. இந்தியாவின் தேசிய மலரான தாமரையின் உருவ அமைப்பைபோல் ராஜ்ய சபா போன்றும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கிடையே பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் புதிய நாடாளுமன்றத்தின் வடிவம் சவப்பெட்டியைபோல் இருப்பதாக விமர்சிக்கப்பட்டது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் அசதுத்தீன் உவைசியும் சவப்பெட்டியுடன் ஒப்பிட்டதை கண்டித்து இருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வலதுகரமான பாஜக மாநில விளையாட்டுப் பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் வடிவமைப்புக்கு புதிய விளக்கத்தை வழங்கி உள்ளார். அதில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படத்துக்கு அருகே பசுவின் படத்தை வைத்து, "புதிய நாடாளுமன்றம் பசு முக கட்டிடக் கலை கொண்டு கட்டப்பட்டது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications