ரூ.1000 கட்டுங்க… தியேட்டரில் ஆண்டு முழுக்க படம் பாருங்க: இது கோவில்பட்டி கலாட்டா
கோவில்பட்டி: தொலைக்காட்சிகளின் வருகைக்குப்பின்னர் தியேட்டருக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து போனது. புத்தம் புதிய படங்களை தியேட்டரில் வெளியாகி சில மாதங்களிலேயே போட்டு விடுவதால் பல தியேட்டர்கள் திருமண மண்டபங்களாகி வருகின்றன.
நகரங்களிலேயே இந்த நிலை என்றால் கிராமங்களில் உள்ள தியேட்டர்களின் கதையை கேட்கவே வேண்டாம். சினிமா ரசிகர்களை கவர புதிய சலுகை ஒன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
1000 ரூபாய் சந்தா செலுத்தினால் ஆண்டு முழுவது சினிமா பார்க்கலாம் என்று கோவில்பட்டி சண்முக திரையரங்கம் விளம்பரம் செய்துள்ளது.
இப்போது திரையரங்கிற்கு மக்களின் வருகை என்பது பெருமளவு குறைந்து விட்டது. ஏதாவது வித்தியாசமாக பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ரூ. 1000க்கு கூப்பன்
கடந்தாண்டு மட்டும் 37 படங்களை வெளியிட்டு இருக்கிறோம். அதில் ஒருவர் 20 படங்கள் பார்க்கிறார் என்று வைத்துக் கொண்டால் கூட, அதற்கான செலவு அவருக்கு ரூ.1000-த்தை தாண்டிவிடும். ஆகையால் இந்த புதிய முறையை அறிமுகப்படுத்துகிறோம். இம்முறைப்படி ரூ.1000 கட்டினால் கூப்பன் ஒன்றை கொடுத்துவிடுவோம்.

ஒரு படத்திற்கு ஒருமுறை
எங்கள் திரையரங்கில் வெளியாகும் படத்தை நீங்கள் இந்த கூப்பனைப் பயன்படுத்தி படத்தினைக் கண்டு மகிழலாம். கூப்பனில் ஒரு படத்தை ஒரு முறை தான் பார்க்க முடியும்.

நண்பர்களுக்கு கொடுங்க
ஒரு வேளை இந்த படத்தைப் பார்க்க உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உங்களது நண்பர்கள், குடும்ப உறுப்பினர் யாராவது உங்களது கூப்பனை எடுத்துக் கொண்டு வந்து படம் பார்க்கலாமாம்.

திருவிழா கூட்டம்
முன்பெல்லாம் மக்கள் தியேட்டர்களுக்கு போவதை திருவிழா போல கொண்டாடுவார்கள். இன்றைக்கு அப்படியில்லை. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். அவர்களை தியேட்டருக்கு அழைத்து வரத்தான் இந்த டெக்னிக் என்கின்றனர். இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்கின்றனர் தியேட்டர்காரர்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications