மீன் குழம்பு ரெடியா ஓவர் ஓவர்.. இப்படியெல்லாம் மெசேஜ் அனுப்பப்படாது ஓவர் ஓவர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையினருக்கு சில கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனவாம். இவற்றை அவர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

முதல்வரின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கான உத்தரவுகள் இவை. இதில் பல கிடுக்கி்ப்பிடியான உத்தரவுகள் அடங்கியுள்ளன.

இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளனவாம். இவற்றை பாதுகாப்புப்படையினர் சரியாக கடைப்பிடிக்கின்றனரா என்றும் கண்காணிக்கப்படுகிறதாம்.

அந்த உத்தரவுகளின் முக்கிய அம்சங்கள்:

செல்போன் பயன்படுத்தக் கூடாது

செல்போன் பயன்படுத்தக் கூடாது

முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர் செல்போன்களைப் பணியின்போது பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எங்கெங்கு பயன்படுத்தக் கூடாது

எங்கெங்கு பயன்படுத்தக் கூடாது

முதல்வர் வருகையின்போது பாதுகாப்புக்காக சாலையில் நிற்கும்போதும், தலைமைச் செயலகத்தில் இருக்கும்போதும் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாதாம்.

பச்சைக் கலர் பாஸ்

பச்சைக் கலர் பாஸ்

முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு புதிதாக பச்சை நிறத்திலான பாஸ் தரப்பட்டுள்ளது. அதை எப்போதும் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டுமாம்.

எஸ்எம்எஸ் அனுப்புவது, வாட்ஸ் ஆப் பார்ப்பது கூடாது

எஸ்எம்எஸ் அனுப்புவது, வாட்ஸ் ஆப் பார்ப்பது கூடாது

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பல போலீஸார் சாலையில் நின்றபடி செல்போன் பார்ப்பதும், எஸ்எம்.எஸ் அனுப்புவதும், வாட்ஸ் ஆப் பார்ப்பதுமாக உள்ளனர். இது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

அலர்ட்டாக இருக்க வேண்டும்

அலர்ட்டாக இருக்க வேண்டும்

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸார் சாலையில் நிற்கும்போது அலர்ட்டாக இருக்க வேண்டும். மாறாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது, போனில் பேசுவது ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் சேர விடக் கூடாது

கூட்டம் சேர விடக் கூடாது

முதல்வர் வரும் பகுதியில் அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள், மூத்த அரசு அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் நிற்க போலீஸார் அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வண்டியை ஒழுங்கா நிறுத்துங்கப்பா

வண்டியை ஒழுங்கா நிறுத்துங்கப்பா

முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களை பார்க்கிங் பகுதியில் சரியான முறையில், யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தால்

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருந்தால்

தலைமைச் செயலகத்தில் பார்க்கிங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும், வாகனமும் இருக்காத வகையில் மிகவும் கவனமாக இருக்குமாறும் போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாஸ் இல்லாமல் விடாதீங்க

பாஸ் இல்லாமல் விடாதீங்க

தலைமைச் செயலகத்திற்குள் முறையான பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் வரும் வழியில்

முதல்வர் வரும் வழியில்

முதல்வர் வரும் பாதையில் தேவையில்லாமல் யாரும் நிற்பதையோ, கூட்டமாக இருப்பதையே போலீஸார் அனுமதிக்கக் கூடாது.

பார்க்கில் ஒரு கண்

பார்க்கில் ஒரு கண்

தலைமைச் செயலகத்திற்கு எதிரே உள்ள பூங்கா பகுதியில் அமர்ந்திருப்போர், கூடியருப்போர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சல்யூட் அடிக்க வேண்டும்

சல்யூட் அடிக்க வேண்டும்

அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் வரும்போது அவர்களுக்குரிய மரியாதையை போலீஸார் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+