அடுத்து 20, 60, 150 ரூபா காயின் தான்... இனி சுருக்கு பை தான் கரெக்ட்... !
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, சமூகவலைதளங்களில் போட்டோஷாப் முறையில் உருவாக்கப்பட்ட புதிய நாணயங்களின் படங்கள் வைரலாக பரவி வருகின
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து நெட்டிசன்கள் தங்கள் கற்பனைக் குதிரையை போட்டோஷாப் உதவியுடன் இஷ்டத்திற்கு பறக்க விட்டுள்ளனர்.
கருப்பு பணத்தை அளிக்கும் முயற்சியாக, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த செவ்வாயன்று இரவு பிரதமர் மோடி அறிவித்தார். அதோடு புதிய 500 மற்றும் 2000 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நெட்டிசன்கள் ஒருபுறம் மீம்ஸ்களாக கலக்கிக் கொண்டிருக்க, மற்றொரு புறமோ போட்டோஷாப் உதவியுடன் சிலர் புதிய புதிய ரூபாய் நாணயங்களாக இணையத்தில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அப்படியாக சில புதிய நாணயங்கள் அறிவிக்கப்பட்டால் என்னென்ன பழைய நாணயங்கள் தடை செய்யப்படலாம் என்ற சின்ன கற்பனை...

1000 ரூபாய் காயின்...
பழைய 1000 ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டு விட்ட நிலையில், அதற்குப் பதில் இந்த நாணயம் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்படலாம்.

100 ரூபாய் காயின்...
பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டு, அதற்குப் பதில் இந்த நாணயங்களை அறிமுகப்படுத்தலாம்.

20 ரூபாய் காயின்...
ஏற்கனவே 1000 ரூபாய் நோட்டை செல்லாததாக்கி விட்டு, 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது போல, பழைய 10 ரூபாய் நாணயங்களை செல்லாது என அறிவித்து விட்டு, இந்த 20 ரூபாய் நாணயங்களை அறிமுகப்படுத்தலாம்.

60 ரூபாய் காயின்...
50 ரூபாய் நோட்டை செல்லாததாக்கி விட்டு, அதற்குப் பதில் இந்த 60 ரூபாய் காயின் அறிமுகப்படுத்தப் படுகிறது என்ற அறிவிப்பு வரலாம்.

சுருக்கு பை தான் கரெக்ட்...
என்ன இப்படியாக நெட்டிசன்கள் ஆசைப்படி எல்லா ரூபாய் நோட்டுகளையும் ஒழித்து விட்டு, அதற்குப் பதில் எல்லாவற்றையும் நாணயங்களாக மாற்றி விட்டால், இனி யாரும் பர்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. அதற்குப் பதில் பழைய படி, பாட்டி சுருக்குப் பைக்கு மாறி விட வேண்டியது தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications