கடலோர காவல் படையில் இணைந்த புதிய கப்பல்
தூத்துக்குடி: இந்திய கடலோர காவல்படையில் புதியதாக ரோந்துகப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இணைக்கப்பட்டுள்ளது.
இந்திய கடலோர காவல் படையில் 26 ஆண்டுகள் சேவை புரிந்த அகல்யாபாய் கப்பலுக்கு பிரியா விடை கொடுக்கப்பட்டது. புதிய கப்பல் தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் அகல்பாய். இந்த கப்பல் 26 காலமாக மன்னார் வளைகுடா பகுதியில் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தது.
பல்வேறு சமயங்களில் திசை மாறிய படகுகள், கடலில் தத்தளித்த மீனவர்கள், காணாமல் போனவர்களை தேடுதல் உள்பட சிக்கலான பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்தைகய சிறப்பு வாய்ந்த இந்த கப்பல் ஏறக்குறைய 26 ஆண்டு காலம் பணி செய்து அதன் ஆயுட் காலத்தை முடித்து விட்டது.
இதன் காரணமாக புதிய ரோந்து கப்பல் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் அகல்யாபாய்க்கு புதிலாக புதிய ரோந்து கப்பல் ஐசிஐசிஎஸ் ஆத்தேஷ் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.
இந்த கப்பல் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் தயாரிக்கப்பட்ட உள் நாட்டு தயாரிப்பாகும். இந்த கப்பல் 50 மீட்டர் நீளமும், 4.65 மீட்டர் மிதவை ஆழம் கொண்டது. மணிக்கு 33 நாட்டிகல் வேகத்தில் செல்ல கூடியது. தொடர்ந்து இடைவிடாமல் 1500 கடல் மைல் தூரம் வரை செல்ல கூடியது. இதன் உடல் அமைப்பு அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஆட்டோ பைலட், பைபா ஆப்டிக் கைரோ காம்பஸ், நேவிகேட் 3000 போன்ற வசதிகளும், முன்பகுதியில் சிறிய பிரங்கியும், பக்க வாட்டில் லைட் மெஷின் கன் உள்ளிட்ட ஆயுதங்களும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் வங்கள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்து பணியை மேற்கொள்ளும்.
இந்தாண்டில் மட்டும் தொடர்ந்து கடலோர காவல் படைக்கு சொந்தமான வீரா, அகல்யாபாய் என்ற இரண்டு கப்பல்கள் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications