டோல்கேட் கட்டணம் அதிரடி உயர்வு - வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி: தூத்துக்குடி மற்றும் நாங்குநேரி டோல்கேட்டில் உயர்த்தப்பட்ட புதிய கட்டண விகிதம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. இவை சுமார் ரூ.350 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 20 சுங்கசாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே சாலைப்புதூர் டெல்கோட்டில் இதுவரை கார், ஜூப் உள்ளிட்ட இலகுரக வாகனங்களக்கு ஒரு வழி கட்டணமாக ரூ.75 வசூலிக்கப்பட்டதில் மாற்றமில்லை. இரு வழிக்கட்டணம் ரூ.110லிருந்து ரூ.115 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.2455லிருந்து ரூ.2510 ஆகவும், (50 ஓரு வழி பயணத்திற்கு மட்டும்) வசூலிக்கப்படுகிறது.
உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.35லிருந்து ரூ.40 என வசூலிக்கப்படுகிறது. இலகுரக வணிக வாகனங்களுக்கு ஓரு வழி கட்டணமாக ரூ.120, இரு வழி கட்டணமாக ரூ.180 மறறும் உள்ளூர் வாகனங்களுக்கு பயண கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது.
மாதாந்திர கட்டணம் ரூ.3965லிருந்து ரூ.4050 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது. பஸ், ஆக்சிஸ் லாரிகளுக்கு ஓரு வழிகட்டணமாக ரூ.250 லிருந்து ரூ.255 ஆகவும், இரு வழிகட்டணமாக ரூ.375லிருந்து ரூ.380 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்களுக்கு ரூ.125ல் மாற்றமில்லை.
நாங்குநேரி டோல்கேட்டில் கட்டண விபரம்:
சொந்த கார், ஜீப், வேன் பழைய கட்டணம் (ஓருமுறை கட்டணம் ரூ.60), இரு வழி கட்டணம் ரூ.90, மாதாந்திர கட்டணம் ரூ.225, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.60), இரு வழி கட்டணம் ரூ.90, மாதாந்திர கட்டணம் ரூ.230, வாடகை கார், ஜீப், வேன் பழைய கட்டணம் (ஓருமுறை கட்டணம் ரூ.60), இரு வழி கட்டணம் ரூ.90, மாதாந்திர கட்டணம் ரூ.1980, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.60), இரு வழி கட்டணம் ரூ.90, மாதாந்திர கட்டணம் ரூ.2025, இலகு ரக சரக்கு வாகனம் பழைய கட்டணம்(ஓருமுறை கட்டணம் ரூ.95), இரு வழி கட்டணம் ரூ.145, மாதாந்திர கட்டணம் ரூ.3200, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.100), இரு வழி கட்டணம் ரூ.145, மாதாந்திர கட்டணம் ரூ.3175, பஸ் மற்றும் லாரிகளுக்கு பழைய கட்டணம்(ஓருமுறை கட்டணம் ரூ.200), இரு வழி கட்டணம் ரூ.300.
மாதாந்திர கட்டணம் ரூ.6710, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.205), இரு வழி கட்டணம் ரூ.310, மாதாந்திர கட்டணம் ரூ.6855, கனரக வாகனங்களுக்கு பழைய கட்டணம்(ஓருமுறை கட்டணம் ரூ.315), இரு வழி கட்டணம் ரூ.475, மாதாந்திர கட்டணம் ரூ.10520, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.325), இரு வழி கட்டணம் ரூ.485, மாதாந்திர கட்டணம் ரூ.10755, கனரக வாகனம் 7 அச்சுக்கு மேல் பழைய கட்டணம்(ஓருமுறை கட்டணம் ரூ.385), இரு வழி கட்டணம் ரூ.575, மாதாந்திர கட்டணம் ரூ.12805, (புதிய கட்டணம்) (ஓருமுறை கட்டணம் ரூ.395), இரு வழி கட்டணம் ரூ.590, மாதாந்திர கட்டணம் ரூ.13090 வசூலிக்கப்படுகிறது. இந்தகட்டண உயர்வால் வாகன ஓட்டிகள் திண்டாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications