ஆர்.கே நகர் மக்களே! என்ன குறையிருந்தாலும் இங்கே சொல்லுங்க... புதிய இணையதளம் தொடக்கம்
ஆர்.கே நகர் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது .
சென்னை : ஆர்.கே. நகர் மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது. அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உள்ளார்.
ஆர்.கே நகரில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் அ.தி.மு.க சார்பில் மதுசூதனன் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். இவருக்கு ஆதரவாக அ.தி.மு.க தலைவர்கள் தொகுதியில் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்திருக்கும் நிலையில், இன்று நேதாஜி நகர் பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளனர்.
அப்போது ஆர்.கே நகர் தொகுதி மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது . அதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். www.rknagar.in என்கிற அந்த இணையதளம் உடனடியாக செயல்பட்டிற்கு வந்தது.
ஆர்.கே நகர் மக்கள் தங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த இணையதளத்தில் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். அத்துடன் மக்கள் தங்கள் குறைகளை 9710173306 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். இந்த இணையதளத்தை அதிமுக ஐ.டி. பிரிவு வடிவமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications