பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல: கருணாநிதிக்கு வைகோ பதிலடி
சென்னை: பழம் கனிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும், நஞ்சு கலந்த பாலில் அல்ல என திமுக -தேமுதிக கூட்டணி குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலடி கொடுத்துள்ளார் .
தமிழகத்தில் வரும் மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இம்முறைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு சமூகவலைதளங்களைப் பயன்படுத்த கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.
அதன்படி, மக்கள் நல கூட்டணி சார்பில் இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்கள் அறிமுக விழா சென்னையில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடைபெற்றது.
அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-

புதிய இணையதளம்...
கூட்டணிக்கான இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களை பிரசாரத்திற்கு பயன்படுத்த உள்ளோம். இணையதளம் அறிமுக படுத்துவதன் மூலம் மக்கள் எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

மாற்று அரசியல்...
இம்முறை இத்தேர்தலில் புதியதோர் மாற்று அரசியலை ஏற்படுத்த உள்ளோம். 22மாவட்டங்களில் பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. 4வது கட்ட பயணம் தயாராகவிருக்கிறோம்.

தேர்தல் அறிக்கை...
தேர்தல் அறிக்கை தயார் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக தேர்தல் அறிக்கை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

பாஜகவின் கோரமுகம்...
பாஜகவின் கோரமுகம் வெளிப்பட்டதால்தான் அக்கூட்டணியில் இருந்து வெளியேறினோம்.

பேர் விடுதலை
தற்போது 7 பேர் விடுதலையில் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகின்றன. நாங்கள் தொடக்கத்தில் இருந்தே விடுதலை செய்யுங்கள் என்று கூறி வருகிறோம். மாநில அரசுக்கு விடுதலை செய்ய உரிமை உள்ளது.

கூட்டணி அழைப்பு...
இதற்கிடையே, தே.மு.தி.க., த.மா.க ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். பட்டியலிட்ட 5 கட்சிகளைத் தவிர மற்ற எந்தக் கட்சிகள் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' என்றார்.

கருணாநிதிக்கு பதிலடி...
மேலும், தேமுதிக - திமுக கூட்டணி குறித்து திமுக தலைவர் கருணாநிதியின் பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வைகோ கூறுகையில், ‘பழம் கணிந்தால் நல்ல பாலில் விழ வேண்டும். ஊழல் நஞ்சு கலந்த பாலில் விழக் கூடாது' எனத் தெரிவித்தார்.

என்ன சொன்னார் கருணாநிதி?...
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுகதலைவர் கருணாநிதி,தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு,பழம் நழுவி பாலில் விழும் நிலையில் உள்ளது என்று கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

முகவரிகள்...
வைகோ இன்று அறிமுகப்படுத்தியுள்ள புதிய இணையதளம், பேஸ்புக், டிவிட்டர், யூ டியூப், இமெயில் மற்றும் வாட்ஸ் அப் போன்றவற்றின் வலைத்தள முகவரிகள் பின்வருமாறு:
www.makkalnalan.in
www.facebook.com/makkalnalan2016
www.twitter.com/makkalnalan2016
www.youtube.com/makkalnalan2016
[email protected]
whatsapp.com 7305 234 234
#MakkalNalan hashtag
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications