தாய் இருமியதால் மிரண்ட நாய்... பிறந்து 3 நாளே ஆன ஆண் சிசுவைக் கடித்துக் கொன்ற பரிதாபம்
நியூயார்க்: டிவி பார்த்துக் கொண்டிருந்த தாய் இருமியதால் மிரண்டு போன நாய், கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிசுவை கடித்துக் கொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சான் டியாகோ நகரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அத்தம்பதியினர் தங்கள் வீட்டில் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று தூங்கிக் கொண்டிருந்த அந்த சிசுவை படுக்கையறையில் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, கணவரும் மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அருகில் அவர்களது செல்ல நாயும் இருந்தது.
அப்போது, திடீரென அப்பெண்ணுக்கு இருமல் வந்துள்ளது. அவர் பயங்கரமாக இருமியதைக் கண்டு அவர்களது நாய் மிரண்டு ஓடியது. நேராக படுக்கையறைக்குள் சென்ற அந்த நாய், அங்கிருந்த சிசுவைக் கடித்துக் குதறியது.
அழுகை சத்தம் கேட்டு விரைந்து சென்ற பெற்றோர், நாயிடமிருந்து மீட்டு குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அது ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்தது விரைந்து வந்த விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நாயைப் பிடித்து சென்றனர். அந்த நாய்க்கு வெறி நாய்கடி நோயை ஏற்படும் ‘ரேபிஸ்' கிருமி தாக்கியுள்ளதா என பரிசோதிக்க அந்த நாயை 10 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
Donald Trump: டிரம்ப் மிகப்பெரிய தாக்குதலை நடத்த தயாராகி வருகிறார்.. ஈரானை மீண்டும் மிரட்டும் அமெரிக்கா -
இருளில் மூழ்கும் நாடுகள்.. அதிர்ச்சி கொடுக்கும் 'எரிசக்தி அவசரநிலை'.. Energy Emergency என்றால் என்ன? -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
புஷ் போட்ட அதே உத்தரவு.. ராணுவ வீரர்கள் வயதை உயர்த்திய டிரம்ப்! பல லட்சம் பேரை ஈரானில் இறக்க முடிவு? -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள்











Click it and Unblock the Notifications