கோயில் வாசலில் கணவரை அடித்து துவம்சம் செய்த கோவை "சரளா".. காரணத்தை கேட்டா வெட்கக் கேடு!
கோயில் வாசலில் கணவனை மனைவி சரமாரியாக அடித்துள்ளார்.
Recommended Video

கோவை: தன் புருஷன் தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் ஆசைப்படுவாள். இதுதான் இயல்பு. இதுதான் காலகாலமாக இருக்கும் பெண்களின் ஆழ்மன உணர்வு. கணவன் தனக்கு மட்டுமே என்று வாழ்ந்துவிட்டால் அந்த பெண்ணுக்கு அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் கிடையாது.
ஆனால் அதற்கு எதிராகவோ, குறுக்காகவோ யாரேனும் வந்துவிட்டால், அந்த பெண் பெண்ணாகவே இருக்கமாட்டாள், கொதித்தே போய்விடுவாள். அப்படி கோபத்தில் பொங்கும்போது இடம், பொருள், ஏவல்... இதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் காற்றில் பறந்து போய்விடும். அப்படி கோவையிலிருந்து காற்றில் பறந்து வந்த செய்திதான் இது.

இது யார் பெயர்?
புது திருமண ஜோடி ஒன்று கோவை சாய்பாபா கோயிலுக்கு வந்தது. இவர்கள் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு 5 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. கோயிலின் நுழைவாயிலில் செல்லும்போது, கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சைக்குத்தி இருப்பதை மனைவி பார்த்தார். இதனால் அதிர்ச்சியுற்று, கணவரிடம் "இது யார் பெயர்" என்று கேட்டார்.

சரமாரி தாக்குதல்
அதற்கு அந்த கணவன், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாகவும், ஒரு குழந்தை கூட இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் தனக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று ஒரு குண்டையும் போட்டார். இதனைகேட்டு, கோபமும், ஆத்திரமும், ஏமாற்றமும், அதிர்ச்சியும், ஒன்று சேர்ந்து கொதித்துப்போன அந்த புதுமணப்பெண், கோயில்வாசல் என்றும் பாராமல் கணவனை சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். கோயிலுக்கு வந்தவர்கள், சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இதனை வேடிக்கை பார்க்க கூடிவிட்டனர்.

போலீசார் அறிவுரை
கணவனை, மனைவி வெளுத்துக்கட்டி, அடித்து துவம்சம் செய்து கொண்டிருப்பதை விலக்கி விட யாருமே முன்வரவில்லை. இதில் கோயிலுக்குள் தரிசனம் செல்ல சென்ற சிலர், இந்த காட்சியை செல்போனிலும் படம்பிடிக்க துவங்கிவிட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், இதுபற்றி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் சென்று முறையிடுங்கள், இப்படி ரோட்டில் நின்று கலாட்டா செய்யலாமா என்று இருவருக்கும் அறிவுறுத்தினர். இந்த காட்சி சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காதலுக்கு கண் இல்லைதான்
ஒருவரை திருமணம் செய்வற்குமுன் அவரைபற்றி முழு விவரங்கள் இல்லாவிட்டாலும் ஓரளவு விவரத்தையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? திருமணமாகி 5 நாட்கள் ஆகியும் கையில் பச்சை குத்தியுள்ளதை ஒரு மனைவி பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான். ஆனால் அதைவிட அதிசயம், இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களாம். எந்த லட்சணத்தில் காதலித்து இருந்தால், இவ்வளவு பெரிய உண்மையை அந்த இளைஞன் மறைத்திருப்பான், அந்த பெண்ணுக்கும் கையில் பச்சை குத்தியது தெரியாமல் இருந்திருக்கும். காதலுக்கு கண் இல்லை என்பார்களே... அதுதானா இது?
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications