புதுவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது - நியூஸ் 7 கருத்துக்கணிப்பு
சென்னை: புதுச்சேரி மாநிலத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பு இல்லை என நியூஸ் -7 தினமலர் கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றது.
நியூஸ் 7 தொலைக்காட்சியும், தினமலர் நாளிதழும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்புகளை மண்டல வாரியாக வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

அதில் திமுக கூட்டணிக்கு 141, அதிமுக கூட்டணிக்கு 87, பாமக 2, தேமுதிக - மநகூ 1, பாஜக - 1 தொகுதிகளில் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும், இரண்டு தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு சம வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புதுச்சேரி மாநில கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது நியூஸ் 7 - தினமலர் நிறுவனம். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் மாஹே, ஏனாம் தவிர மீதமுள்ள 28 தொகுதிகளின் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது நியூஸ் -7 தினமலர்.
இக் கருத்துக்கணிப்பின் படி காங்கிரஸ் + திமுக கூட்டணிக்கு 12 தொகுதிகளிலும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 12 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தனித்துப் போட்டியிடும் அதிமுகவுக்கு 3 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணாடிப்பட்டு தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கூட்டணிக்கும் சமநிலை நிலவுகிறது. இங்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 34. சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் + திமுக கூட்டணிக்கும் 34 சதவீத ஆதரவு காணப்படுகிறது. அதிமுகவுக்கு 8.2 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications