மேற்கு மண்டல எம்.எல்.ஏக்கள் சுத்த 'வேஸ்ட்'.. 69.7% மக்கள் கடும் அதிருப்தி: நியூஸ் 7 கருத்துக் கணிப்ப
சென்னை: நியூஸ் 7 டிவி மற்றும் தினமலர் நாளிதழ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளில் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகளுக்கு மக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மற்றும் தினமலர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. மண்டல வாரியாக கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது நியூஸ் 7 - தினமலர் நாளிதழ்.

இன்று மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த 57 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில் திமுகவின் கை ஓங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கு மண்டலத்தில் உள்ள எம்.எல்.ஏக்களின் செயல்பாடு மற்றும் அரசு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்தும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதில், மேற்கு மண்டலத்தில் அரசு நிர்வாகம் குறித்து 63.6 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 36.4 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர்
மேலும், மேற்கு மண்டலத்தில் தற்போதைய எம்.எல்.ஏக்களின் செயல்பாடு குறித்து 69.7 சதவீதம் பேர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.30.3 சதவீதம் பேர் மட்டுமே திருப்தி தெரிவித்துள்ளனர். இதன் மூலம் மேற்கு மண்டலத்தில் அரசு நிர்வாகமும் சரியில்லை, எம்.எல்.ஏக்களும் சரியில்லை என்று ஏகமனதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications