Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிய ‘விக்கெட்’.. சொல்லி அடிக்கும் எடப்பாடி! அதிமுகவில் இணைந்த முன்னாள் கொறடா திருச்சி மனோகரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுக பொருளாளரும், திருச்சி மாவட்ட செயலாளருமான ஆர்.மனோகரன், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். அமமுகவில் அடுத்த 'பெரிய விக்கெட்' விழுந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளனர். அடுத்தடுத்து நீதிமன்றங்களில் ஈபிஎஸ்ஸுக்கு சாதகமான உத்தரவுகளே கிடைத்ததால், எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

Next big wicket from AMMK : Former MLA Joins AIADMK in the presence of Edappadi Palanisamy

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. இது அவரது தரப்புக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்நிலையில், ஓபிஎஸ், தினகரன் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவி வருகின்றனர்.

அமமுக டு அதிமுக : அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை கடுமையாக அட்டாக் செய்து பேசி வந்த நிலையில், அடிமடியிலேயே கை வைத்து முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஈபிஎஸ். கடந்த 2 மாதங்களாக அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.

அமமுக மாநில இளைஞரணி செயலாளராகவும், அமமுக செய்தி தொடர்பாளராகவும் இருந்த கோமல் அன்பரசன் கடந்த மார்ச் 12ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அமமுக தலைமை நிலைய செயலாளராகவும், மதுரை மண்டல பொறுப்பாளராகவும் செயல்பட்டு, பின்னர் தினகரனுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அக்கட்சியில் இருந்து விலகி சசிகலா ஆதரவாளராகச் செயல்பட்டு வந்த திருப்பத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவனும் அதிமுகவில் இணைந்தார்.

Next big wicket from AMMK : Former MLA Joins AIADMK in the presence of Edappadi Palanisamy

முன்னாள் எம்.எல்.ஏ தாவல் : அவர்களைத் தொடர்ந்து, அமமுக மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நேற்று முன்தினம் அமமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான மா.சேகர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏவும், அமமுகவின் முக்கிய நிர்வாகியுமான திருச்சி ஆர்.மனோகரன் அதிமுகவில் இணைந்துள்ளார். ஆர்.மனோகரன் 2011-2016 காலகட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது முன்னின்று பணியாற்றிய மனோகரனுக்கு அரசு கொறடா பதவி வழங்கி கௌரவித்தார் ஜெயலலிதா.

தினகரன் அதிர்ச்சி : பின்னர், அமமுக தொடங்கப்பட்ட பிறகு தினகரனுடன் இருந்த மனோகரன், மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். வெற்றிவேல் மறைவுக்குப் பிறகு அமமுகவில் பொருளாளர் பதவி மனோகரனுக்கு வழங்கப்பட்டது. தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்கிய மனோகரன் இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்ட பின்னர், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பேன், ஒரு சிலரை தவிர அனைவரும் இணைந்து பணியாற்றலாம் என்றார். அதன்படி, அமமுகவின் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஈபிஎஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+