ஒரே நாளில் இரு அதிரடிகள்.. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின்.. பெங்களூரில் நிகில் குமாரசாமி..!
வாரிசுகளுக்கு குமாரசாமியும், முக ஸ்டாலினும் ஒரே மாதிரி பதவி வழங்கி உள்ளனர்
Recommended Video
சென்னை: அடடா.. இதெல்லாம் நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா.. ஒரே நாளில்.. ஒரே மாதிரியான பொறுப்பை.. தங்கள் வாரிசுகளுக்கு தந்து அசத்தி உள்ளனர் இரு மாநில தலைவர்கள்! அவர்கள் குமாரசாமியும், முக ஸ்டாலினும்தான்!
தேர்தல் ரிசல்ட் முடிந்ததில் இருந்தே உதயநிதிக்கு புதிய பொறுப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. அதன்படியே இன்று வழங்கப்பட்டும் விட்டது. இதுபோலவே குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் இளைஞர் அணி தலைவர் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

உதயநிதி ஆகட்டும், நிகில் ஆகட்டும்.. இருவருக்குமே நிறைய ஒற்றுமை உள்ளது. இருவரின் தாத்தாக்களுமே (கருணாநிதி, தேவகெளடா) அரசியலில் ஜாம்பவான்களாக இருந்தவர்கள். இவர்களின் அப்பாக்கள் மாபெரும் கட்சியின் தலைவர்கள். இவர்கள் இருவருமே சினிமாவில் ஹீரோக்களாக நடிப்பவர்கள். அதிலும் குறுகிய காலத்தில் ஃபேமஸ் ஆனவர்கள்.
அதேபோல இருவருக்குமே தங்களது கட்சியின் மூத்த நிர்வாகிகளை காட்டிலும் அரசியல் ஞானமும், அனுபவ அறிவும் குறைவே. எனினும் சொந்த செல்வாக்கை வைத்து இளைஞர் அணி பொறுப்பு இவர்களுக்கு அவர்களது அப்பாக்கள் தந்திருக்கிறார்கள். ஒரே நாளில், ஒரே மாதிரியான பதவியை, வாரிசுகள் பெற்றிருப்பது ஆச்சரியத்தை தந்துள்ளது.
அதேசமயம், இந்த இரு மாநிலங்களில், கட்சிக்காக உழைத்தவர்கள், என்றைக்காவது நமக்கும் பதவி வரும் என்று காத்திருப்பவர்களுக்கு அதிர்ச்சியையும் விரக்தியையும் தந்துள்ளது. இருப்பினும் இந்திய அரசியல் களம் அடுத்த தலைமுறைகளுக்கு இடம் பெயர ஆரம்பித்து விட்டதையே இவை உணர்த்துவதாக உள்ளன.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications